அமெரிக்க ரிடெயில் நிறுவனமான வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தில் உள்ள தங்களது பங்குகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் டாலர் கொடுத்து வால்மார்ட் நிறுவனம் சென்ற ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது. இந்த பரிமாற்றம் நடைபெற்றபோது பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 20.8 பில்லியன் டாலராகக் கணக்கிடப்பட்டு இருந்தது.
பங்குகள்
வால்மார்ட் நிறுவனம் தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் உள்ள 81.3 சதவீத பங்குகளை சொந்தம் ஆக்கியுள்ளதாகவும், மேலும் 2 பில்லியன் டாலர் முதலீட்டினை பங்கு சந்தை மூலம் திரட்ட உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
மறுப்பு
இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரிடம் கேட்ட போது வால்மார்ட் நிறுவனத்திற்கு 77 சதவீத பங்குகள் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
சீனா நிறுவனமான டென்செண்ட்க்கு பிளிப்கார்ட் நிறுவனத்தில் 5.37 சதவீத பங்குகளும், நியூ யார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டைகர் குலோபலிடம் 4.77 சதவீதம் பங்குகளும் உள்ளது.
பின்னி பன்சால்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துள்ள பின்னி பன்சாலிடம் நிறுவனத்தின் 4.2 சதவீத பங்குகள் உள்ளது.
மைக்ரோசாப்ட் மற்றும் பிற முக்கிய முதலீட்டாளர்கள்
அது மட்டும் இல்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 1.53 சதவீத பங்குகளும், அக்செல் பார்ட்னர்ஸிடம் 1.38 சதவீத பங்குகளும், ஐகானிக் கேப்பிட்டலிடம் 0.98 சதவீத பங்குகளும், டீம் சீக் நிறுவனத்திடம் 0.29 சதவீத பங்குகளும், யூபிஎஸ்ச் நிறுவனத்திடம் 0.19 சதவீத பங்குகளும் உள்ளது.
சச்சின் பன்சால், சாப்ட் பாங்க், நேஸ்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வால்மார்ட் பிளிப்கார்ட் பங்குகளை வாங்கும் போதே அவற்றை விற்றுவிட்டு வெளியேறிவிட்டனர்.
கூகுள்
வால்மார்ட்டின் பிளிப்கார்ட் நிறுவனத்தில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டும் 1 முதல் 2 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது. மறு பக்கம் கூகுள் நிறுவனமாகச் சொந்தமாக ஒரு இ-காமர்ஸ் தளத்தினை தொடங்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
பணி நீக்கம்
வால்மார்ட் நிறுவனம் 200 முதல் 700 ஜபாங் நிறுவன ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாகவும், இதற்காகவே சோனி பிக்ச்சர்ஸ் நிறுவனத்தில் புதிய மனித வள மேம்பாட்டு அதிகாரி ஒருவரைப் பணிக்கு எடுத்துள்ளனர் எனவும் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications