மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அன்மையில் நடைபெற்ற சேமிப்பு மற்றும் ரீடெயில் வங்கி சேவைகள் குறித்த சர்வதேச கூட்டம் ஒன்றில் பங்கேற்ற போது சில வருடங்களுக்கு முன்பு 60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை என்று கூறினார்.
மோடி
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவான வங்கிக்கு வராத நிதிகளை வங்கிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதன் கீழ் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்குத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அதில் வெற்றி அடைந்துள்ளோம் என்றும் அருண் ஜேட்லி பேசினார்.
இந்தியர்கள்
நான்கு - ஐந்து வருடங்கள் முன்பு 60 கோடி இந்தியர்கள் அவர்கள் வாழ்வில் வங்கிகளையே பார்த்ததில்லை. பாதுகாப்பு இல்லாத வகையிலேயே தங்களது நிதிகளை நிர்வகித்து வந்துள்ளனர். ஆனால் இப்போது அதில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 33 கோடி நபர்கள் ஜன் தன் வங்கி கணக்குகளைத் திறந்துள்ளனர் என்றார்.
ஏழ்மை
இந்தியாவில் ஏழ்மை குறைந்து வேகமாகப் பொருளாதார வளர்ச்சி பெற ஏழை ம் அற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கொள்கைகள் வகுப்பது அவசியமாக உள்ளது என்றும் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.
ஜன் தன் வங்கி கணக்கு
ஜன் தன் வங்கி கணக்கு திறக்கும் போது ஜீரோ பேலன்ஸ் என்றாலும் அதில் மக்கள் தொடர்ந்து பணத்தினை டெபாசிட் செய்வது அதிகரித்து வருவதாக ஜேட்லி கூறினார்.
உலக வங்கி
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜன் தன் வங்கி கணக்கு சேவை வந்த பிறகு உலகளவில் அதிகபட்சமாக 48 சதவீத வங்கி கணக்குகளை இந்தியர்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 80 சதவீத இந்திய இளைஞர்களுக்கு ஜன் தன் வங்கி சேவை வங்கி கணக்கை அளித்துள்ளது.
ஓவர் டிராப்ட்
வங்கி கணக்கு தொடங்குவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஜன் தன் வங்கி கணக்கில் அளிக்கப்பட்டு வந்த ஓவர் டிராப்ட் சேவைக்கான 5,000 ரூபாய் என்ற வரம்பினை 10,000 ரூபாயாக உயர்த்தியதாக நிதி சேவைகள் துறை செயலாளர் ராஜிவ் குமார் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் மீதம் உள்ள 20 சதவீத இளைஞர்களையும் வங்கி கணக்கு தொடங்க வைப்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications