பார்க் என அழைக்கப்படும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் கண்காணிக்கும். அவர்கள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தியாவில் சர்வதேச மற்றும் இந்திய கார்ப்ரேட் நிறுவனங்களை விடக் கூடுதலாகப் பாஜக விளம்பரத்திற்காகச் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது.
2018 நவம்பர் 10 முதல் 2018 நவம்பர் 16-ம் தேதி வரையில் மட்டும் பாஜக நெட்பிளிக்ஸ், டிரிவாகோ அற்றும் அமேசான் நிறுவனங்களை விட அதிகமாகத் தோலைக்காட்சிகளில் விளம்பரம் செய்துள்ளது.
பாஜக
பாஜக விளம்பரம் 22,099 முறைகள் ஒளிபரப்பப்பட்ட நிலையில் நெட்பிளிக்ஸ் விளம்பரம் 12,951 முறை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. விமால் பான் மசலா என்ற நிறுவனத்தினைப் பின்னுக்குத் தள்ளி இவை இரண்டும் முதல் இரண்டு இடத்தினைப் பிடித்துள்ளன.
தேர்தல்
சட்டிஷ்கர் தேர்தல் முடிந்துள்ளது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்ம் தெலுங்கான மற்றும் மிசோரம் தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பது போன்ற காரணங்களினால் பாஜக அதிக விளம்பரம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி
பொருள், சேவை அல்லது அரசியல் கட்சிகள் என எந்த ஒரு விளம்பரமாக இருந்தாலும் தொலைக்காட்சிகள் மூலம் ஒரே நாளில் அதிகப்படியான மக்களிடம் எளிமையாகத் தகவலை சேர்த்துவிடலாம்.
அரசியல் கட்சிகள்
இதில் முக்கியமானது என்னவென்றால் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த ஒரு கட்சியும் டாப் 10 விளம்பரதாரர்கள் பட்டியலிலேயே இல்லை என்பதே ஆகும்.


Click it and Unblock the Notifications