ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகப் பெரிய கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அதன் இண்டிபெண்டண்ட் இயக்குநர் ராஜன் மத்தாய் தனக்குள்ள பிற கடமைகளின் அழுத்தத்தால் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு, ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் அளிக்க முடியாத நிலை போன்றவற்றில் சிக்கித் தவித்து வரும் நிலையில் நிறுவனத்தின் மேலிடத்திற்கு மேலும் அதிர்ச்சி ஆகியுள்ளது.
டாடா குழுமம் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்குவது குறித்த பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் இன்னும் கண்டிப்பாக வாங்குவது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
"தனக்கான தனிப்பட்ட கடமைகளால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குநராக நேரத்தை ஒதுக்க முடியவில்லை, வாரியத்தில் இருந்து ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளேன்," என்று ராஜன் மத்தாய் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications