பிரதமர் மோடியின் கனவான மும்பை - அமதாபத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் அதற்காக நிலம் கையகப்படுத்துவதில் சர்ச்சை இருந்தாலும் இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இரண்டாவது புல்லட் ரயில் திட்டம்
இந்தியன் ரயில்வே முதலில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படட்டும் என்று நின்று விடாமல் அடுத்தக் கட்டமாகச் சென்னையில் இருந்து மைசூருக்கு பெங்களூரு வழியாக இரண்டு மணி நேரத்தில் செல்ல கூடிய திட்டம் குறித்த பணிகளில் இறங்கியுள்ளது. அதே நேரம் இந்தப் புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.
குறைந்த அளவு மட்டுமே நிலம் தேவை
சென்னை - மைசூரூ இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கான சர்வே பணிகள் ஜெர்மன் தூதரின் வெற்றிகரமாக நடைபெற்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதையில் ஏற்கனவே ரயில்வே பாதைகள் மற்றும் நிலங்கள் உள்ள நிலையில் குறைந்தபட்சம் நிலம் மட்டுமே கையகப்படுத்த வேண்டி வரும். மேலும் 845 சதவீத புல்லட் ரயில் பாதைகளுக்கான நிலங்கள் இந்தியன் ரயில்வேஸிடம் உள்ளது, 11 சதவீதம் குகைகள் வழியாக ரயில் செல்லும், 5 சதவீதம் மட்டும் நிலம் கையகப்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்படும் என்றும் கூறுகின்றனர்.
பயண நேரம்
மும்பை -அகமதாபாத் இடையிலான புல்லெட் ரயில் மணிக்கு 320 கிலோ மீட்டர் செல்லும் என்று கூறப்படும் நிலையில் 496 கிலோ மீட்டர் தொலைவிலான சென்னை - மைசூருக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும்.
முதலீடு மற்றும் நிதி
சென்னை - மைசூர் புல்லட் ரயில் சேவையினைத் தொடங்க 1.14 லட்சம் கோடி ரூபாய்ச் செலவாகும் என்றும் இந்தத் திட்டத்திற்கு ஜெர்மன் நிறுவனம் நிதி அளித்து உதவி செய்யும் என்றும் 25 வருடங்கள் அந்த நிறுவனத்தின் கீழ் இந்தச் சேவை அளிக்கப்பட்டு அதற்கான நிதியைத் திரும்பப்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மும்பை புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் முதலீடு அளித்து உதவுவது குறிப்பிடத்தக்கது.
எப்போது முதல்?
இன்னும் 3 வருடத்தில் இந்தத் திட்டத்திற்கான முழுமையான பணிகள் தொடங்கும் என்றும் கட்டுமான பணிகள் நிறைவேற 9 ஆண்டுகள் ஆகும் என்றும் 2030-ம் ஆண்டுத் தமிழ் நாட்டில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications