இந்திய மாணவர்களிடம் இருந்து மட்டும் அமெரிக்க அரசுக்கு ஆண்டுக்கு 80,000 கோடி ரூபாய் வருவாய்க் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
இதில் ஆச்சரியம் என்னவென்றால் மத்திய அரசு ஐஐடி, என்ஐஐடி மற்றும் ஐஐஎம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்காகச் செலவு செய்வதை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதே ஆகும்.
இந்திய கல்வி பட்ஜெட்
மத்திய அரசு 2018-2019 பட்ஜெட்டின் போது உயர் கல்விக்காக ஒதுக்கிய தொகை 35,000 கோடி ரூபாய். ஆனால் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் வாரி இறைத்த தொகை 80,000 கோடி ரூபாய்.
இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் இந்த ஆண்டு 1,96,271 மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சென்று படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது என்கிறது ஆய்வுகள்.
மேலும் அமெரிக்கச் சென்று படிக்கும் மாணவர்களில் 66 சதவீதத்தினர் தனியார் கல்வி நிறுவனங்களில் படிப்பதாகவும், நியூ யார்க், காலிபோர்னியா மற்றும் மாசசூசெட்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் தங்கி இருப்பதாகவும் கூறுகின்றனர்.
அதிகக் கட்டணம்
உலகளவில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து அதிகக் கட்டணத்தினை வசூலிக்கின்றன. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை மாணவர்கள் கட்டணமாகச் செலுத்துகின்றனர்.
சராசரி
அதிலும் சராசரியாக 23.5 லட்சம் ரூபாயினை இந்திய மாணவர்கள் சராசரியாக அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கட்டணமாகச் செலுத்துகின்றனர்.
செலவு
ஆண்டுக்குக் குறைந்தபட்ச செலவு என்று பார்த்தால் ஒரு மாணவருக்கு 7.61 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்கின்றனர். மேலும் அதிகபட்சமாக ஆண்டுக்கு 42 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. 1,96,271 மாணவர்கள் என்றால் ஆண்டுக்கு 85,010 கோடி ரூபாயினை இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் செலவு செய்கிறார்கள்.
படிப்பு
அமெரிக்கா வரும் 90 சதவீத வெளிநாட்டு மாணவர்கள் கணினி, கணக்கு, நிர்வாக அறிவியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளைத் தான் தேர்வு செய்கின்றனர்.
ஊக்கத்தொகை
அமெரிக்கச் சென்ற சில ஆயிரம் மாணவர்கள் உதவித்தொகை மூலம் சென்று இருந்தார்கள் என்று வைத்துக்கொண்டு இருந்தாலும் அமெரிக்காவிற்கு இந்த ஆண்டு மட்டும் 80,000 கோடி ரூபாய் வருவாய் இந்திய மாணவர்களால் கிடைத்துள்ளது.
மாணவர்கள்
இந்திய மாணவர்களில் 18 சதவீதத்தினர் சீனர்களுக்கு அடுத்தபடியாகத் தான் கல்லூரிகளில் அமருவதாகவும், முதுகலைப் பட்டம் பெறுபவர்களில் இந்தியா முதல் இடத்திலும், இளங்கலை பட்டம் பெறுபவர்களில் இந்தியா 4-ம் இத்தினையும் பிடித்துள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!



Click it and Unblock the Notifications