மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் என்பிஎஸ் அடிப்படையிலான புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜிர்வால் பழைய பென்ஷன் திட்டத்தினை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளார்.
தனது மாநிலம் மாநிலம் மட்டும் இல்லாமல் பாஜக ஆட்சி இல்லா மேற்கு வங்கம், கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த பிற மாநில முதல்வர்களிடமும் இது குறித்து வழியுறுத்துவதாகவும் கெஜிர்வால் கூறியுள்ளார்.
டெல்லி
டெல்லி சட்ட மன்றம் அடுத்த முறை கூடும் போது பழைய பென்ஷன் திட்டத்தினை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் பழைய பென்ஷன் திட்டம் குறித்த பரிந்துரைக்கு மாநிலத்தில் சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதனை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
அரசுச் ஊழியர்கள்
அரசு ஊழியர்களுக்கு அரசையே மாற்றும் அதிகாரம் உள்ளது. தான் அரசை எச்சரிக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் இது குறித்த முடிவினை மத்திய அரசு எடுக்காவிட்டால் 2019 பொதுத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இதனைப் பெரிது படுத்தும் என்றும் கெஜிர்வால் கூறியுள்ளார்.
துரோகம்
புதிய பென்ஷன் திட்டம் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் மற்றும் மோசடி என்றும் கெஜிர்வால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதிய பென்ஷன் திட்டம்
2004-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பென்ஷன் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு என இரண்டையும் சேர்த்து என்பிஎஸ் மூலம் பங்கு சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்து லாபம் அளிப்பதன் மூலம் வரும் தொகையினைப் பென்ஷனாக அளிப்பது ஆகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications