அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆன்லைனை விடியோ ஸ்ட்ரீமிங்கில் மிகப் பெரிய சந்தையுடன் இயங்கி வரும் நெட்பிளிக்ஸ் ஜப்பான், கனடா மற்றும் பிற 9 நாடுகளை விட இந்தியாவில் அதிகக் கட்டணத்தினை வசூலிக்கின்றது.
உலகம் முழுவதும் 26 நாடுகளில் நெட்பிளிக்ஸ் தங்களது ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையினை வழங்கி வரும் நிலையில் இந்தியாவில் வசூலிக்கப்பட்டும் 500 ரூபாய் என்பது 10 வது குறைந்த விலை என்று தெரிவித்துள்ளனர்.
குறைந்த கட்டணத்தில் நெட்பிளிக்ஸ் சேவை எங்குக் கிடைக்கிறது?
நெட்பிளிக்ஸ் நிறுவனம் துருக்கியில் தான் உலகளவில் குறைந்த விலையில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையினை வழங்குகிறது.3.27 டாலர் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தினை விடக் குறைந்த கட்டணத்தில் இங்குச் சேவையினை வழங்குகிறது.
அமெரிக்கா 26 வது இடத்திலும், இங்கிலாந்து 25வது இடத்தினையும் பிடித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தினை விடப் பிற நாடுகளின் நெட்பிளிக்ஸ் சந்தா கட்டணம் குறைவாக இருக்க முக்கியக் காரணம் மானியம் வழங்குவது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஜப்பான்
ஜப்பானில் நெபிளிக்ஸ் 6,000 திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. உலகளவில் இங்குத் தான் அதிக வீடியோக்களை நெட்பிளிக்ஸ் வழங்குகிறது.
இந்தியா
நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனம் 5,000 தலைப்புகளில் விடியோக்களை ஸ்ட்ரீம் செய்கிறது. அதில் 3,500 திரைப்படங்களும் அடங்கும். நெட்பிளிக்ஸ் நிறுவனம் சந்தா மாதம் 499 ரூபாய் என்றாலும் இரண்டு ஆண்டுகளில் இந்த ஆண்டு முதன் முறையாக 20 லட்சம் ரூபாய் லாபத்தினை ஈட்டியுள்ளது.
போட்டி நிறுவனங்கள்
போட்டி நிறுவனங்களான அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் ஆண்டுக்கு 999 ரூபாய்க்கும், சன் நெக்ஸ்ட் ஆண்டுக்கு 600 ரூபாய்க்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தாக்களை வழங்கி வருகிறது.
கட்டணம் குறையுமா?
நெட்பிளிக்ஸ் இந்தியா கட்டணத்தினைக் குறைக்கும் அல்லது மலேஷியா பொன்று மொபைலுக்கான சிறப்புக் குறைந்த விலை சந்தா திட்டத்தினை வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதனை நிறுவன தரப்பு மறுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications