“மோடிஜி, நீங்க நல்லா இருக்க ஒரு அட்வைஸ் சொல்லட்டா” மன்மோகன் சிங் உருக்கம்..!

முன்னாள் மத்திய அமைச்சர் மனீஷ் திவாரியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மன்மோகன் சிங் மோடிக்கு எனது சார்பில் ஒரு அறிவுரையைச் சொல்ல விரும்புவதாகக் கூறினார். அது தான் செய்தியே.

விருப்புகள்

விருப்புகள்

மோடி, பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களுக்குச் செல்லும் போது, ஏதோ பிரயோஜனம் இல்லாத மாநிலத்துக்குச் சென்று வருவதூ போலத் தோன்றுகிறது. ஒரு நாட்டின் பிரதமர் அப்படி பாரபட்சத்துடன் நடந்து கொள்ளக் கூடாது. எல்லா மக்களுக்கும், எல்லா மாநிலங்களுக்கு ஒரே மாதிரி நடந்து கொள்ளும் விதத்தில் சில கட்டுப்பாடுகளை தானே கடைப்பிடிக்க வேண்டும் என மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

 என் காலத்தில்

என் காலத்தில்

நான் பிரதமராக இருக்கும்போது குறிப்பாக தேர்தல் நேரங்களில் எதிர் காட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட (அன்றைய பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் கூட) அந்த மாநிலத்தின் முதல் அமைச்சரிடம் கூட நல்ல உறவு தான் இருந்தது. ஆனால் அது தற்போது அப்படி ஒரு நல்லுறவை என்னால் பார்கக் முடியவில்லை. மாறாக ஒரு வெறுப்புணர்வை உணர முடிகிறது.

உறவுக்குச் சான்று

உறவுக்குச் சான்று

கடந்த 10 ஆண்டு காலம் பிரதமாரக இருந்த போது கூட காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலங்களோடான உறவை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியும். உதாரணமாக மத்திய பிரதேச முதல் அமைச்சரான பாஜக-வை சார்ந்த சிவராஜ் சிங் சவுஹான் கூட நான் சொல்வதை ஒப்புக்கொள்வார். மாநிலத்தின் முன்னேற்றம் குறித்து விவாதித்திருக்கிறோமோ ஒழிய பார பட்சம் காடியது இல்லை. அதை சிவராஜ் சிங்கே ஒப்புக்கொண்டிருக்கிறார். அது தான் ஒரு நாட்டின் பிரதமருக்கான முதல் கடமை என நான் நினைக்கிறேன்.

மோடி

மோடி

மோடி தனது கட்சி ஆளும் அல்லாத மாநிலங்களுக்குச் செல்லும்போது அவரின் பேச்சில் மிகப் பெரிய வித்தியாசம் தெரிகிறது. நாட்டில் உள்ள அனைவர்க்கும் அவர் தான் பிரதமர். அதனால் அவரது நடத்தைத் தகுதி உள்ளதாக இருக்க வேண்டும் மற்றும் அவரது கடமை ஆற்றுவதில் சீராக வேண்டும்.

என் தவறு

என் தவறு

கடந்த 2014 மன்மோகன் சிங் கூறியது, " மோடி பிரதமர் ஆனால் இந்தியா மிகப் பெரிய பேரழிவைச் சந்திக்கும்". இனி இந்த வார்த்தைகளை மறுபடியும் சொல்லமாட்டேன் என மன்மோகன் சிங் கூறினார். அதே போல் தா இன்று வரை அந்த கடுமையான வார்த்தைகளை சொல்லாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

கடுமை

கடுமை

மோடி தனது தேர்தல் பரப்புரைகளில் எதிர்க்கட்சிகளை மிகவும் தாக்கி பேசுவதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. எந்த சாடலுக்கும் ஒரு அளவு உண்டு. இத்தகைய செயல்களால் ஒரு பிரதமருக்கான தகுதியோடு அவர் செயல் படவில்லை என மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்தார்.

ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரசின் முத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,"மோடி அவரது பரப்புரையில் ஒரு பிரதமராக இருந்ததே இல்லை என்பதை அவர் சொல்லும் வார்தைகளும், பொய்களுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதோடு நின்று கொண்டால் கூட பரவாயில்லை வரலாற்றை தவறாகத் திரிப்பது போன்ற பெரிய காரியங்களில் எல்லாம் வேறு ஈடுபடுகிறார்.

மரியாதை

மரியாதை

மோடி மரியாதையைக் கேட்டு வாங்கக்கூடாது மக்கள் தானாகவே அவருக்கு மரியாதையை அளிக்க வேண்டும் அது தான் ஒரு பிரதமருக்கு அழகு என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

கஜா புயல்

கஜா புயல்

இத்தனை நாள், காங்கிரஸ் என்னென்னமோ விஷயங்களைச் சொன்னது. அதை எல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு மன்மோகன் சிங் சார் சொல்வதைப் பார்த்தல் மோடி ஒரு தலைப் பட்சமாக, பிரதமர் என்கிற பதவிக்கு தர வேண்டிய மரியாதையை மறந்து செயல்பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிய வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் இன்று வரை பாஜகவுக்கு புண்ணியம் இல்லாத, தமரை மலரவே மலராத தமிழகத்தையே புரட்டிப் போட்ட கஜா புயலைப் பற்றி ஒரு ஆறுதல் வார்த்தைப் பேசவில்லை... ஒரு முறை வந்து மக்களைப் பார்க்கவில்லை... இறந்த விவசாயியைப் பற்றி நினைக்கவில்லை... ஆனால் என்ன செய்ய கிரகம் இவர் தான் நம் பிரதமர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+