நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனங்கள் வர இருக்கும் டிசம்பர் மாதம் முதல் டிவி மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் விலையினை விழா காலச் சலுகைகள் முடிந்ததை அடுத்து உயர்த்த உள்ளன.
விழா காலச் சலுகைகளை வாரி வழங்கிய நுகர்வோர் சாதன உற்பத்தியாளர்கள் தங்களது உள்ளிட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதா இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ரூபாய் மதிப்பு
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது மற்றும் சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியது போன்ற காரணங்களினால் தான் உற்பத்தியாளர்களுக்கு உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பானாசோனிக்
பானாசோனிக் இந்தியா நிறுவனம் தங்களது நுகர்வோர் சாதனங்களின் விலையினை 7 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது தயாரிப்புகளின் விலையினை உயர்த்தியுள்ளன.
ஹையர்
விழாக்காலங்களில் இந்தியர்கள் அதிகளவில் பொருட்களை வாங்குவார்கள் என்பதற்காக விலை உயர்த்தும் முடிவைத் தள்ளி வைத்து இருந்ததாகவும் தற்போது விலையை உயர்த்தும் நேரம் வந்துவிட்டது என்றும் ஹையர் இந்தியா தெரிவித்துள்ளது.
நுகர்வோர் மின்னணு மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம்
நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தித் துறையானது விழாக் காலங்களுக்கு முன்பு செப்டம்பர் மாதமே தங்களது தயாரிப்புகளின் விலையில் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தின. ஆனால் அது நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பினை பெரிய அளவில் சரிக்கட்டவில்லை என்றும் அதனால் தான் விழாக் காலம் முடிந்த உடன் மீண்டும் விலை ஏற்றம் நடைபெற உள்ளது என்று நுகர்வோர் மின்னணு மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்துள்ளது.
டிசம்பர்
விழா காலங்களுக்குப் பிறகு டிவி, ஏசி விற்பனை சரிந்துள்ளதாகவும், குளிர்சாதனப் பெட்டி விற்பனை பிளாட்டாக உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனிடையில் புதிய விலை உயர்வு டிசம்பர் முதல் அமலுக்கு வர உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications