இந்திய ரீடைல் சந்தையைப் பிடித்த துடிக்கும் வால்மார்ட் அமெசான் நிறுவனங்கள் மத்தியில் தற்போது போட்டி தாறுமாறாக அதிகரித்துள்ளது. குறிப்பாக வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு அமேசான் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா போன்று இந்தியாவிலும்
அமெரிக்காவில் வால்மார்ட் அமேசான் போட்டி போடுவது போலத் தற்போது இந்தியாவிலும் போட்டி போட்டு வருகிறது. இந்தப் போட்டியின் அடுத்தகட்டமாகத் தற்போது இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகப் பங்கை வைத்துள்ள பிக் பஜார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை அமேசான் வாங்குவதன் மூலம் அமேசான் இனி இணையத்தில் மட்டும் அல்லாமல் நேரடியாகக் கடைகள் வாயிலாகவும் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ஒரு படி மேல்
இதன் மூலம் வால்மார்ட் நிறுவனத்திற்கு இணையாக என்பதைவிடவும் ஒரு படிக்கு மேல் அதிகமான வர்த்தகத்தைச் அமேசானால் செய்ய முடியும்.
பியூச்சர் குழுமம்
அடுத்த 8-10 வருடத்திற்குத் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் மேம்படுத்தும் நோக்கத்துடன் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பீசோஸ் பியூச்சர் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானியிடம் பங்குகளை வாங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.
அமேசான் பியூச்சர்
நீண்ட காலமாக அமேசான் பியூச்சர் குரூப் இணைப்பு பற்றிப் பேசி வரும் நிலையில், இந்தப் பேச்சு வார்த்தையின் மூலம் அமேசான் பியூச்சர் ரீடைல் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 9.5 சதவீத பங்குகளைக் கைப்பற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுக்குறித்து இருதரப்பும் இதுவரை எவ்விதமான அறிவிப்பும், தகவல்களும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிஷோர் பியானி
கிஷோர் பியானி அவர்களிடம் இக்குழுமத்தின் 46.51 சதவீத பங்குகள் உள்ளது, இந்நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 26,648.69 கோடி ரூபாய், ஆண்டின் மொத்த வர்த்தம் 4,928.52 கோடி ரூபாய், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மொத்த லாபம் 175.10 கோடி ரூபாய்.
பிக் பஜார்
மேலும் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 355 நகரங்களில் 1,123 கடைகளைக் கொண்டு மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications