பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் மற்றும் டெக் மஹிந்தரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக உள்ளது.
அதன் அடுத்தக் கட்டமாக இன்போசிஸ் நிறுவனம் அதன் ஊழியர்களின் திறனை அதிகரிக்க, ஊழியர்கள் வெளியேற்றத்தைக் குறைக்க மற்றும் சம்பளத்தினை இரட்டிப்பாக உயர்த்த புதிய திட்டத்தினைக் கையில் எடுத்துள்ளது.
ஏன் இந்தப் புதிய திட்டம்?
இன்போசிஸ் நிறுவனம் தங்களது புதிய பயிற்சி திட்டங்கள் கீழ் கூடுதல் திறனை பெறுபவர்களின் சம்பளத்தினை இரட்டிப்பாக்க உள்ளது. இந்தப் புதிய கட்டமைப்புத் திட்டங்கள் ஊழியர்களை வெளியே செல்வதைக் குறைப்பது மட்டும் இல்லாமல் திறனை அதிகரிக்கவும் உதவும்.
சம்பள உயர்வு
இந்தத் திறன் அதிகரிப்பு திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களின் சம்பளம் 80 முதல் 120 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் முதற்கட்டமாக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தப் பயிற்சியைப் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி
இன்போசிஸ் வழங்கும் இந்தப் புதிய திறன் பயிற்சி திட்டங்களில் உள்ள ஊழியர்களால் 3 ஆண்டுக்கு ராஜிநாமா செய்துவிட்டு வெளியில் செல்ல முடியாது. புதிய டிஜிட்டல் பயிற்சிகள், வடிவமைப்பு, திட்டம் மற்றும் கன்சல்டிங் உள்ளிட்ட திறனை அதிகரித்துக்கொள்ள முடியும்.
பிரெஷர்கள்
அன்மையில் பிரெஷர்களின் சம்பளத்தினை இன்போசிஸ் நிறுவனம் அதிகரித்த நிலையில் மூத்த ஊழியர்களுக்கு நெருக்கடி ஆனது. அதனைச் சரி செய்யவே இந்தப் பயிற்சிகள் என்றும் இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
ஊழியர்கள் வெளியேற்றம்
இந்திய ஐடி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்கள் வெளியேறும் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதனால் நிறுவனத்தின் வளர்ச்சிகளில் தேக்கம் அடைவது மட்டும் இல்லாமல் சரியான நேரத்தில் வேலையினை முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இன்போசிஸ் - ஊழியர்கள்
இவற்றை எல்லாம் சரி செய்ய என்ன செய்வது என்று ஆராய்ந்து வந்த இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு ஊழியர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஊழியர்களுக்குச் செலவு செய்வது அதிகரித்தாலும் லாபமும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications