நிதி நெருக்கடியில் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்க நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி முடிவெடுத்துள்ள நிலையில், இதற்கான அனுமதியை காம்பிடிஷன் கமிஷன் அமைப்பிடம் பெற வேண்டும்.

எல்ஐசியின் முடிவை ஆலோசனை செய்த இவ்வமைப்பு, ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகள் வரையில் எல்ஐசி கைப்பற்றலாம் என அறிவித்துள்ளது.
இந்தப் பங்கு கைப்பற்றல் மூலம் எல்ஐசி நிறுவனம் ஐடிபிஐ வங்கியின் வாயிலாக நேரடி வங்கி சேவைகளை மக்களுக்கு வழங்கும் நிலையை அடையும். இதனால் எல்ஐசி நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் புதிய பரிமாணத்தை அடையும்.
அதுமட்டும் அல்லாமல் நிதி நெருக்கடியில் தவிக்கும் ஐடிபிஐ வங்கிக்கு இப்பிரச்சனையில் இருந்து மீண்டு வர மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
இந்நிலையில் எல்ஐசி, ஐடிபிஐ வங்கியின் ஒரு பங்கை 61.73 ரூபாய் விலையில் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி முதல் கைப்பற்ற உள்ளது.


Click it and Unblock the Notifications