வோடாபோன் ஐடியா நிறுவனம் நாடு முழுவதும் 16,000 விநியோகஸ்தர்கள் மற்றும் 2000 பிராண்டட் ஸ்டோர்களை இந்த நிதி ஆண்டுடன் மூட முடிவு செய்துள்ளது.
இந்த நிறுவனத்திற்குத் தற்போது 43,000 விநியோகஸ்தர்கள் உள்ள நிலையில் டிசம்பர் மாத இறுதிக்குள் 27,000 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
ரீடெயில் ஸ்டோர்கள்
அதே போன்று வோடாபோன் ஐடியா நிறுவனத்திற்கு 6,000 பிராண்டட் ரீடெயில் ஸ்டோர்கள் உள்ள நிலையில் அதனை 2019 மார்ச் மாதத்திற்குள் 4,000 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
வாடிக்கையாளர் சேவை மையம்
அது மட்டும் இல்லாமல் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அதாவது கால் செண்ட்டர்களையும் 82-ல் இருந்து 38 ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் வணிக ரீதியான ஒருங்கிணைப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க்
வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைந்ததை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் என்ற பெயரினை வோடாபோன் இந்தியா பெற்றுள்ளது.
கடன்
என்ன தான் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் என்ற பெயர் வோடாபோன் ஐடியாவிற்க்கு கிடைத்து இருந்தாலும் இரண்டு நிறுவனங்களுக்கு 1.2 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் தொடர்ந்து வாடிக்கையாளர்களையும் இழந்து வருவதாகக் கூறப்படுகிறது.
நட்டம்
வோடாபோன் ஐடியா நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 4,973 கோடி ரூபாய் நட்டம் அடைந்ததாக அறிவித்து இருந்தது. வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் 2018 ஆகஸ்ட் 31 முதல் முழுமையாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள்
ஜியோ வந்த பிறகு ஆர்காம், ஏர்செல் என டெலிகாம் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் லட்சம் கணக்கான ஊழியர்கள், டீலர்கள் மற்றும் ரீடெயில் ஊழியர்களின் வேளை பறிபோன நிலையில் வோடாபோன் ஐடியா நிறுவனங்களின் இந்த முடிவாலும் ஆயிரம் கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications