இந்திய டெலிகாம் துறையின் இந்த மோசமான நிலைக்கு ரிலையன்ஸ் ஜியோவே காரணம் என்றும் அரசு அவர்களுக்குச் சாதமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் வரும் 2018 டிசம்பர் 3-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
4ஜி அலைக்கற்றை வழங்கவில்லை
பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மத்திய அரசு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினைக் காப்பாற்றவும் அதற்குப் போட்டியாகப் பிஎஸ்என்எல் வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகவே 4ஜி அலைக்கற்றைத் தங்களுக்கு ஒதுக்கவே இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ள இந்தப் புகார்களுக்கு இது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரிலையன்ஸ்ச் ஜியோ வணிக ரீதியாகத் தங்களது சேவையினை வழங்கத் தொடங்கியதில் இருந்தே இந்திய டெலிகாம் துறை மோசமான நிலைக்குக் சென்று விட்டது.
போட்டியாளர்கள்
போட்டியாளர்களை மொத்தமாக வெளியேற்றுவதே ரிலையன்ஸ் ஜியோவின் நோக்கம், அதில் பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் அடங்கும் என்றும் ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
நிறுவனங்கள் மூடல்
ஏர்செல், டாடா டெலிசர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெலினார் நிறுவனங்கள் ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த விலை திட்டங்களினால் மூடப்பட்டுவிட்டன. போட்டி குறைந்ததும் ரிலையன்ஸ் ஜியோ கண்டிப்பாகக் கால் மற்றும் தரவு கட்டணங்களை உயர்த்தும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நேரடியாக உதவி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம்
பிரதமர் அலுவலகத்திடம் இருந்தும் இதுவரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் கிடைக்கவில்லை. ரிலையன்ஸ் ஜியோவிற்குப் போட்டியாகப் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் காதில் விழவே இல்லை. எனவே 2018 டிசம்பர் 3-ம் தேதி முதல் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பிற கோரிக்கைகள்
இந்த வேலை நிறுத்த போராட்டம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு அரசு அளித்து வரும் ஆதரவை எதிர்த்து மட்டும் இல்லாமல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பெஷன் திட்டம் மாற்றம், ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்வு போன்ற கோரிக்கைகளும் அடங்கும்.
தனியார் நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள் அனைத்து 4ஜி சேவைக்குச் சென்றுவிட்டது மட்டும் இல்லாமல் 5ஜி சேவை வழங்குவது குறித்துத் திட்டமிட்டு வரும் நிலையில் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது வரை 4 ஜி சேவைக்கான உரிமங்கள் வழங்கப்படவில்லை என்பது பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தி வருகிறது.
பென்ஷன்
நரேந்திர மோடி தலைமையிலான அரசு விதிகளை மீறி ஒவ்வொரு ஆண்டும் தங்களது பென்ஷன் பங்களிப்பில் இருந்து பெறும் தொகையினை அளிக்காமல் வருவதாகவும் இது நிறுவனத்தின் நிதி மற்றும் வளர்ச்சியில் பெறும் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாகவும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications