இந்தியாவின் நம்பர் 1 ஐடி சேவைகள் நிறுவனமான டிசிஎஸ் ஒரே மாதத்தில் இரண்டு நிறுவனங்களை வாங்க முடிவு செய்திருப்பது போட்டி நிறுவனங்களை வாயை பிளக்க வைத்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரிட்ஜ் பாயிண்ட் குழுமம் என்ற நிர்வாகக் கன்சல்டண்ட் நிறுவனத்தினை வாங்குவதாக டிசிஎஸ் புதன்கிழமை உறுதி செய்துள்ளது.
ஊழியர்கள்
டிசிஎஸ் நிறுவனத்திற்குப் பிரிட்ஜ் பாயிண்ட் குழுமம் விலை போனதை அடுத்து அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களும் விரைவில் டிசிஎஸ் கீழ் பணிக்குச் சேருவார்கள் என்று கூறப்படுகிறது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனம் தற்போது அமெரிக்காவின் டாப் 10 வங்கிகளில் 8 நிறுவனங்கள், நிதி சேவை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தங்களது ஐடி சேவையினை வழங்கி வருகிறது.
பிரிட்ஜ் பாயிண்ட்
டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது தங்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் நன்மை அளிக்கும், தங்களது வாடிக்கையாளர்கள் புதிய தீர்வுகளுக்காகக் காத்திருக்கின்றனர், டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரிட்ஜ் பாயிண்ட் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சந்தை மதிப்பு
பிர்ட்ஜ் பாயிண்ட் நிறுவனம் அமெரிக்க ஓய்வூதிய சேவை சந்தையில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பினை கொண்டுள்ளது. அது டிசிஎஸ் நிறுவனத்துடன் இணையும் போது இன்னும் வேகமான வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
W12 ஸ்டூடியோஸ்
2018 நவம்பர் 1-ம் தேதி தான் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிஜிட்டல் ஸ்டூடியோவான W12 ஸ்டூடியோஸை வாங்குவதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications