தமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு அறிவிக்கும் 1 நாளுக்கு முன்பு ஓய்வு பெற்றால் அவர்களுக்கு இதுவரை ஊதிய உயர்வினை அளிக்காமல் இருந்து வந்தது.
தற்போது அதில் திருத்தம் செய்துள்ள தமிழ் நாடு அரசு ஊதிய உயர்வு அறிவிப்பிற்கு 1 நாள் முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் புதிய ஊதிய வரம்புகள் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாகவே தமிழ் நாடு அரசு ஊழியர்கள் சங்கத்திடம் இருந்து இது குறித்துக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் அரசின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்தப் புதிய விதிமுறைகள் வரும் காலங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டுமா அல்லது முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் அளிக்கப்படுமா என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.
இது மட்டும் இல்லாமல் தமிழ் நாடு அரசு ஊதிய உயர்வு அறிவிப்புக்கு மூன்று மாதத்திற்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கும் புதிய விதிமுறைகளின் படி ஊதிய உயர்வு அளிக்க அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற தகவல்களுக்குத் தொடர்ந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தினைப் படித்து வாருங்கள்.


Click it and Unblock the Notifications