1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..!

தமிழக விவசாயிகள் மட்டும் குரல் கொடுத்துக் கொண்டிருந்த போது கண்டு கொள்ளாத மத்திய அரசு, இப்போது மற்ற மாநிலத்து விவசாயிகளும் இணைந்து குரல் கொடுக்கும் போது திரும்பிப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது.

விவசாயப் போராட்டம்

விவசாயப் போராட்டம்

பா.ஜ,க தனது நான்காண்டு ஆட்சியில் விவசாயிகளின் எதிர்ப்பை எண்ணிக்கையில்லாமல் சந்தித்து வந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிர்வாணப் போராட்டம், எலிக்கறி தின்னும் போராட்டம் என அரசுக்கு எதிரான கோபம் எக்கச்சக்கமான வடிவங்களை எடுத்தது. அண்மையில் நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் நடத்திய ஊர்வலத்தால் டெல்லியே ஸ்தம்பித்துப் போனது.

தமிழக விவசாயிகள்

தமிழக விவசாயிகள்

தமிழக விவசாயிகள் மட்டும் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல. நாடு முழுவதும் விவசாயிகளின் அதிருப்தியை சந்தித்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

வெங்காய உற்பத்தி

வெங்காய உற்பத்தி

இந்திய வெங்காய உற்பத்தியில் 50 சதவீதம் மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக்கில் இருந்து தான் இந்தியாவுக்கு சப்ளை ஆகிறது. மற்ற மாநிலங்களின் தேவையை நாசிக் விவசாயிகள் தான் பூர்த்தி செய்து வருகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அம்மாநில விவசாயிகளுடன் பேசி உள்ளார்.

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்

வெங்காய உற்பத்தியில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், விலை வீழ்ச்சி காரணமாக வருவாயை இழந்துள்ளனர். நிபாத் மொத்த கொள்முதல் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சாத்தே என்ற விவசாயி உற்பத்தி செய்த 750 கிலோ வெங்காயத்துக்கு, இப்படித்தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மணிக்கணக்கில் பேரம் பேசி 750 கிலோவுக்கு 1064 ரூபாய் அதாவது கிலோவுக்கு 40 பைசா கூட்ட அத்தனை பேச்சு பேசி இருக்கிறார். அதன் பின் தான் அவர் கேட்ட விலைக்கு வெங்காயத்தை விற்க முடிந்ததாக தெரிவித்தார்.

பிரதமருக்கு மனி ஆர்டர்

பிரதமருக்கு மனி ஆர்டர்

விலை வீழ்ச்சியை கண்டு கொள்ளாத அவர்கள், மனி ஆர்டர் மூலம் 1064 ரூபாயை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளனர். பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய தொகைக்கு கூடுதலாக 54 ருபாயும் மணி ஆர்டர் செலவுக்கு சேர்த்து அனுப்பி வைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதன் மூலமாவது விவசாயிகளின் பரிதாபத்துக்குரிய நிலைமையை அரசு புரிந்து கொள்ளுமா என்று எதிர்பார்க்கிறார்கள்.

புறக்கணிப்பு- அவமதிப்பு

புறக்கணிப்பு- அவமதிப்பு

8 வருடத்துக்கு முன்பு ஒபாமா மும்பை வந்திருந்தபோது, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார்கள். அதில் நம் சாத்தேவும் ஒருவர். இவரை சேவியர் கல்லூரியின் ஒரு ஸ்டால் போடச் சொல்லி ஓபாமாவுடன் பேச வைத்தது இந்திய வேளான் அமைச்சகம். அப்படிப்பட்ட ஒரு முன்னனி விவசாயி இந்த நூதனப் போராட்டத்தை கையில் எடுத்திருப்பது பலரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

 வருத்தம்

வருத்தம்

"கடந்த 3 - 4 மாதமாக இதற்கு அத்தனை கஷ்டம் பட்டிருக்கிறோம். அத்தனை கஷ்டத்துக்குமான விலை என்ன தெரியுமா 1064 ரூபாய். என கண்ணீர் விடாத குறையாக வருத்தப்பட்டிருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+