கறுப்புப் பண ஒழிப்புக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..!

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

கவுண்டர் ஸ்ட்ரைக்

கவுண்டர் ஸ்ட்ரைக்

குறிப்பிட்ட சில நிமிடங்களில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அதிர்ச்சியளித்த இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் ஒரே கொந்தளிப்பு. அப்போது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த கடினமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். உயர் மதிப்புடைய பணத்தை செல்லாது என்று அறிவித்த மோடியின் நோக்கம் நிறைவேறியதா என்பது அவ்வப்போது எழும் விமர்சனங்கள் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றன.

 ஓ.பி.ராவத்தின் அனுபவம்

ஓ.பி.ராவத்தின் அனுபவம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த (இப்போது தானே பொறுப்பேற்றார்) ஓ.பி.ராவத் பல்வேறு சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்தியவர். அண்மையில் நடந்து முடிந்த சத்தீஷ்கர் மாநில தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்தவர்.

ஆர்.கே நகர் தேர்தல்

ஆர்.கே நகர் தேர்தல்

ஆனால் சென்னை ஆர்.கே..நகரில் அவர் சந்தித்த தேர்தல் முறைகேடுகள் 3 பொதுத் தேர்தல்களை நடத்திய அனுபவத்தை அளித்திருக்கக்கூடும். அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து கடந்த 1 ஆம் தேதி ஓய்வு பெற்றார். பணப் பட்டுவாடா என்ற கெட்ட கனவிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவர் தன் ஆதங்கத்தை வெளியில் கொட்டியுள்ளார்.

தேர்தலில் கறுப்புப்பணம்

தேர்தலில் கறுப்புப்பணம்

மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், அதற்கு பிரதமர் மோடி சொன்ன விளக்கமும் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஓ.பி.ராவத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கலாம்.. ஆனால் இந்த நம்பிக்கை தேர்தல் நடத்திய பல காலக்கட்டங்களில் சிதைந்து போனதை பணப் பட்டுவாடாவில் பார்க்க முடிந்தது.

வருத்தம்

வருத்தம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் தேர்தலில் கறுப்புப்பணம் அதிகரித்திருப்பதை அவரே தெரிவித்துள்ளார். பண பலத்தைக் கொண்டு தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக கவலை தெரிவித்துள்ள அவர், இது தேர்தல் ஆணையத்துக்கு சவாலாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

ராவத்தின் ஆசை

ராவத்தின் ஆசை

தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக சீர்திருத்தங்களை கொண்டு வர சட்ட அமைச்சகத்துக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தவர் ராவத். ஆனால் அவரது பதவிக்காலத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓய்வு பெற்ற பிறகு தனது ஆசையை ஒரு கோரிக்கையாக வைத்துள்ளார்.

 வேண்டுகோள்

வேண்டுகோள்

தேர்தலில் பண பலத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வலியுறுத்தியுள்ள அவர். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் குறித்து வரையறைகள் தேவை என்று கூறியுள்ளார். தேர்தல் நேர்மையாகவும், நியாயமாக நடைபெற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது கட்டாயம் என்கிறார். நடக்குமா... ஏனென்றால் இது மோடி ஆட்சி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+