உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லாம போய்க்கிட்டு இருக்கு. இப்டியே போய்க்கிட்டு இருந்தா இழுத்துப் பூட்ட வேண்டி இருக்கும் என்று இந்திய விமான போக்கு வரத்து நிறுவனங்களை எச்சரித்துள்ளது மத்திய அரசு. பெனால்டிகளை விதிக்கவும், விதிமுறை மீறும் நிறுவனங்களை இழுத்து மூடவும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷனுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
புகார்கள்
தனியார் விமான நிறுவனங்கள் மேல் அண்மைக்காலமாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. முன் பதிவு செய்து விட்டு ஏர்போர்ட் போனா திருப்பி அனுப்புறது, தட்டிக் கேட்டவங்களை ஊழியர்களை விட்டு தாக்குவது போன்ற பிரச்சினைகள் மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் தவறான நடத்தை, விதிமுறை மீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது சாட்டையை சுழற்றத் தொடங்கியுள்ளது. மலிவான சேவைகைளால் பயணிகளை ஏமாற்றி வரும் விமான நிறுவனங்கள் மீது நடவடிக்கையை இறுக்க முடிவு செய்துள்ளது.
நடவடிக்கைக்கு பரிந்துரை
இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் பயணி ஒருவரிடம் நடத்திய அதகளம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இதில் தலையிட்ட டி,ஜி,சி,ஏ வேறு வழியின்றி அவர்களை எச்சரித்து அனுப்பியது.இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில், எல்லை மீறும் தனியார் விமான நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் தப்பில்லை என்று டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷனுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ரூ.5 லட்சம் அபராதம்
விமான நிறுவனங்கள் செய்துவரும் அத்துமீறல், விதிமீறலுக்கு ஏற்றவாறு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. முதல் முறையாக நடைபெறும் தவறுக்கு 5 லட்சம் ரூபாயும், அடுத்தடுத்து நடைபெறும் தவறுகளுக்கு இரண்டு மடங்காகவோ அதற்கும் கூடுதலாகவோ அபராதம் விதிக்கலாம் என்று டி.ஜி,சி,ஏவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சாட்டையை எடுத்தா தான் பயபுள்ளைக பயப்படும்னா அதையே செய்யுங்க ன்னு சொல்லியாச்சு. முதல்ல சிக்கப் போறது யார்னு பாக்கலாம்.


Click it and Unblock the Notifications