அங்கங்கெ காதுல பூசுத்துன அனில் அம்பானி கடற்படை காதிலும் பூசுத்துனது எப்படி..!

மேக் இன் இந்தியா திட்டம் நாட்டுக்கு பயன்பட்டதோ இல்லையோ அனில் அம்பானிக்கு நன்றாகவே உதவியுள்ளது. ரோந்து கப்பல்களை தாயரித்து கொடுப்பதற்காக அனில் அம்பானியில் ஆர்.என்.இ.எல் நிறுவனமும், இந்திய கடற்படையும் ஒப்பந்தம் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறிய அந்த நிறுவனம், கடற்படை வழங்கிய 100 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதத்தை ரொக்கமாக மாற்றிக் கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது இதனால் அம்பாயின் ஆர்.என்.இ.எல் நிறுவத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கப்பல் படை தளபதி சுனில் லம்பா தெரிவித்துள்ளார்.

லம்பா தகவல்

லம்பா தகவல்

கடற்படை தின விழாவில் கலந்து கொண்டபோது இது தொடர்பாக பேசிய லம்பா, அனில் அம்பானியின் நிறுவனம் சட்ட நடவடிக்கைகளை சந்தித்து வருவதாகத் தெரிவித்தார். கார்பரேட் கடன் மறுசீரமைப்புக்கு உள்ளாகியுள்ள அம்பானியின் நிறுவனத்தின் மீது, வங்கிகளும், .ஐ.டி.பி.ஐ பேங்கும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக கூறினார்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

2500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஆப்ஷோர் பேட்ரோல் வெஷல் தயாரிப்பதற்காக அனில்அம்பானியின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். அந்த ஒப்பந்ததை இதுவரை விலக்கிக் கொள்ளவில்லை என்று தெரிவித்த லம்பா, அது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ள வருவதாக கூறினார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஒப்பந்தங்களை நிறைவேற்றித் தருவதற்காக வரையறுக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டி ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்து வருகிறது.ஒப்பந்தத்தை நிறைவேற்றித் தருவதற்கான காலக்கெடுவை மீறிய அம்பானியின் நிறுவனம், 2017 க்கும் பின்ன முதல் முறையாக குஜராத் மாநிலம் விபாபாவில் 2 ரோந்து கப்பல்களை இயக்கியது. பி/21 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 5 ரோந்து கப்பல்களில் 2 மட்டும்தான் ஒப்படைக்கப்பட்டது இந்நிலையில் 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள எல்.பி.டி புராஜெக்ட் பணிகளை வழங்காமல் ஒத்திபோட உள்ளதாக சுனில் லம்பா தெரிவித்துள்ளார்.

 

 

கப்பல்கள் தயாரிப்பு

கப்பல்கள் தயாரிப்பு

கப்பல்படையை நவீனமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் இதற்காக 3 இல் 1 பங்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் லம்பா தெரிவித்தார். கடற்படைக்காக 32 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமானப்பணிகள் இந்தியாவில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+