வருமான வரிச் செலுத்துவோர் எண்ணிக்கை கடந்த நிதி ஆண்டைக்காட்டிலும் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சி.டி.பி.டி சேர்மன் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.. இந்த சாதனையை படைப்பதற்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
எண்ணிக்கை உயர்வு
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க உதவியுள்ளதாக கூறிய அவர், இதுவரை 6.08 பேர் வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம் ஆகும்.
நம்பிக்கை
இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய சுஷில் சந்திரா, நடப்பு ஆண்டில் நேரடி வரி வசூல் 11.5 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.. நேரடி வரி வருவாய் பிரிவின் குறிப்பிட்ட இந்த இலக்கை எட்டுவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பணமதிப்பு நீக்கத்தின் பயன்
வெளிநாடுகளில் பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள இதுவரை 70 நாடுகள் முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நேரடி வரி வருவாய் வளர்ச்சி 16.5 சதவீதமாகவும், ஒட்டுமொத்த வளர்ச்சி 14.5 சதவீதமாகவும் இருப்பதாகக் கூறிய சுஷில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கையும், வரி வசூலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
கார்ப்பரேட் வரி உயர்வு
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கார்ப்பரேட் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக கூறினார். ஏற்கனவே 7 லட்சமாக இருந்த எண்ணிக்கை தற்போது 8 லட்சமாக உயர்ந்துள்ளதாக சுஷில் சந்திரா தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications