இதில் தமிழகம் தான் முன்னிலையா, ரைட்டு அப்ப வட இந்தியா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை (SDG - Sustainable Development Goals) அடைவதில் ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு, மிசோரம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரா, கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்கல் முன்னிலையில் உள்ளதாக நிதி அயோக் அரிவித்திருக்கிறது.

 

பிரிவுகள்

பிரிவுகள்

உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை 17 சர்வதேச இலக்கு களையும், அதில் 169 பிரிவுகளையும் வகுத்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை.

முக்கியமானவைகள்

முக்கியமானவைகள்

வறுமையை ஒழிப்பு, சுகாதாரம், பாலின ஒற்றுமை, தூய்மையான மற்றும் விலை குறைவான எரிசக்தி, சுத்தம் மற்றும் சுகாதாரம், பொதுவான வாழ்வாதாரம் போன்ற முக்கிய அளவீடுகளை முன் வைக்கின்றன. 2016-ல் கொண்டு வரப்பட்ட இந்த இலக்குகள் 2030-ல் எட்டப்பட வேண்டும் என கால அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அளவீடு

அளவீடு

ஐக்கிய நாடுகள் அமைப்பு தற்போது எஸ்டிஜி (SDG) இண்டெக்ஸ் ஒன்றையும் இதோடு வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், ஐநாவின் இந்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் இந்திய மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து நிதி ஆயோக் அமைப்பும், தன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஏன் இந்தியா
 

ஏன் இந்தியா

மக்கள் தொகை அடிப்படையில், இந்தியா உலகின் 17 சதவிகித மக்களுக்கான நாடு. அதனால் தான் இந்த பட்டியலில் இந்தியா மற்றும் சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என ஐக்கிய நாடுகள் சபை சொல்கிறது.

மதிப்பெண்கள்

மதிப்பெண்கள்

SDG - Sustainable Development Goals மதிப்பீடுகளில் 0 - 49 மதிப்பெண்களுக்கு உள் வரும் மாநிலங்கள் செயல்படும் மாநிலங்களாகவும், 50 - 64 மதிப்பெண்களுக்குள் வந்தால் முன்னோக்கிச் செல்லும் மாநிலங்களாகவும், 65 - 99 மதிப்பெண்களுக்குள் வந்தால் சாதித்த மாநிலங்களாகவும், 100க்கு 100 மதிப்பெண் எடுத்தால் தான் முன்னோடி மாநிலமாக கருதுவார்களாம். இந்த அடிப்படையில் தான் தற்போது இந்திய மாநிலங்களுக்கு மதிப்பீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

தமிழகம் முன்னனி

தமிழகம் முன்னனி

அந்த அறிக்கையில், வறுமையைக் குறைப்பதில் தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வறுமையைக் குறைப்பதில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறது அந்த அறிக்கை.

பசியைத் தீர்ப்பதில் தமிழகம் இல்லை

பசியைத் தீர்ப்பதில் தமிழகம் இல்லை

பசிக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வது, ஊட்டச் சத்து மற்றும் போஷாக்கு பற்றாக்குறை போன்ற உணவுப் பிரச்சினைகளை கையாள்வதில் கோவா, மணிப்பூர், கேரளா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இந்தப் பிரிவில், சட்டீஸ்கர், ஒடிசா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களும், ஏழு யூனியன் பிரதேசங்களும் மிகத் தீவிரமாக இருப்பதாகச் சொல்கிறது அறிக்கை.

13-ல் டாப் தமிழகம்

13-ல் டாப் தமிழகம்

நீடித்த வளர்ச்சிக்காக நிணயிக்கப்பட்டிருக்கும் 17 இலக்குகளில் 13 இலக்குகளில் ஹிமாச்சலப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் செயல்படுகின்றன. அஸ்ஸாம், பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த விஷயங்களில் மோசமாக செயல்படுகிறதாம்.

மீதி 4 இலக்குகள்..?

மீதி 4 இலக்குகள்..?

பல்வேறு இலக்குகள் குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லாததால் அவற்றை குறித்து ஆராய முடியவில்லை என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ள இலக்குகளில் 100 சதவிகிதம் நிறைவேற்றிய மாநிலம் இந்தியாவில் ஒன்று கூட இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: development growth report niti ayog
English summary

sustainable development growth report says that tamilnadu is in a leading position

sustainable development growth report says that tamilnadu is in a leading position
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X