மிகக் குறைந்த விலையில் அனைத்து ஊர்களுக்கும் விமான சேவையை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம், இந்த இயர் என்ட் சேல் ஆக 899 ரூபாய் முதல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய சலுகையை அறிவித்துள்ளது.
உள்நாட்டு சேவை தான் 899 ரூபாய் முதல் எனில், வெளிநாட்டு சேவை 2,999 ரூபாய்க்கும் அறிவித்துள்ளது. அதிலும் இந்த மலிவான விலைக் கட்டணங்களுடன் மற்ற கட்டணங்கள் ஏதும் இன்றி செய்து கொண்டு இருக்கிறோம் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது.
இன்றிலிருந்து சலுகை ஆரம்பம்
மேலும் இந்த அதிரடி சலுகையானது இன்று முதல் தொடங்குகிறது என்றும், இது நான்கு நாட்களுக்கு இந்த சலுகை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் வழங்கும் இந்த சேவையின் மூலம் பதிவு செய்யப்படும் டிக்கெட்கள் மூலம் ஜனவரி 15, 2020, முதல் ஏப்ரல் 15 2020 வரை பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பட்ஜெட் சேவை
இந்த சலுகையை டிசம்பர் 23 ஆன இன்று6 மணி முதல், டிசம்பர் 26 அன்று 23.59மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது. இந்தியாவின் பட்ஜெட் விமான சேவை என்று அழைக்கப்படும் இந்த விமான சேவையானது, குறைந்த விலையில் சேவையினை மக்களுக்கு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த குறைந்த கட்டண சேவையானது இண்டிகோ விமான சேவையை வழங்கும் அனைத்தும் புக்கிங் சேவை மையங்களிலும் புக்கிங் செய்து கொள்ளலாம். எனினும் இண்டிகோ தளத்தில் அல்லது இண்டிகோ மொபைல் தளத்தில் பதிவு செய்து கொள்ள பூஜ்ஜிய கட்டணமாகும்.
பயன் இருக்கும்
இந்த அதிரடி சலுகையை இண்டிகோவின் சமீபத்திய எந்த சலுகைகளுடன் ஒப்பிட முடியாது என்றும், மேலும் இதை மாற்ற முடியாது என்றும், பரிமாற்றம் செய்ய முடியாதது என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது. சலுகை ஒரு புறம் இருந்தாலும் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. எனினும் இது ஜனவரி முதல் ஏப்ரல் வரை பயணிக்கலாம் என்பதால், பயணிகளுக்கு உபயோகமாகவும் இருக்கும்.
விமானத்தில் பறக்க வாய்ப்பு
எனினும் இந்த அதிரடி சலுகையானது குழும பதிவுகளுக்கு செல்லுபடியாகாது என்றும், இந்த நிறுவனத்தின் போர்டலில் தெரிவித்துள்ளது. எனினும் இந்த சலுகையானது ரயில் கட்டணங்களை விட மலிவான விலையில் இருப்பதால் அடித்தட்டு ,மக்களும் விமானத்தில் பயணிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
வாங்க வாங்க ஜாலியா ஒரு ரெய்டு போய்ட்டு தான் வருவோம்..!
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications