Modi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Modi-க்கும் சரி, ராகுல் காந்திக்கும் சரி மக்களா ஆட்சியா என்றால்... கண்ணை மூடிக் கொண்டு ஆட்சியைத் தான் கட்டிப் பிடிப்பார்கள். சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள், போக்குவரத்து என அனைத்து அடிப்படை விஷயங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாக்கம் நேரடியாக இருப்பது நாம் அறிந்ததே. இருப்பினும் மத்திய அரசும் மாநில அரசும் தங்களது வருவாய் குறையக்கூடாது என்பதற்காக எரிபொருள் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கேட்டால் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் என சாக்கு போக்கு சொல்கிறார்கள். தேர்தல் என வந்தால் நீ ஏன் குறைக்கவில்லை என நல்ல பிள்ளை போல கேள்வி கேட்கிறார்கள்.

 

காசு தான் முக்கியம்

காசு தான் முக்கியம்

மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே வாட் வரி, சுங்க வரி, கலால் வரி என பல்வேறு வரி விதிப்புகளை குறைத்துக் கொள்வதாக இல்லை. இப்போது 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி அடித்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் மோடி, சோலாப்பூர் பிரசாரத்தில் மோடி ராகுலை ஒரண்டை இழுத்திருக்கிறார். அதற்கு ராகுலும் பதிலளித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதிலுக்கு மோடியைப் பார்த்து நேரடியாக ஒரு சவால் வேறு விட்டிருக்கிறார். வாங்க பாக்கலாம்.

ராகுல் கேள்வி ஜிஎஸ்டி இல்லை

ராகுல் கேள்வி ஜிஎஸ்டி இல்லை

நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைகளை எல்லாம் மோடிஜியின் கனவுத் திட்டமான ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் வருவாய் போய்விடும் என்கிற ஓரே காரணத்துக்காக மத்திய மாநில அரசுகள் பெட்ரேல், டீசலை ஜிஎஸ்டிக்குள் சேர்க்காமலேயே டபாய்த்து வருகிறார்கள். மோடிஜி எப்போது பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவீர்கள் என முதல் கேள்வியை எழுப்பி இருக்கிறார். அடுத்த கேள்வியை பார்ப்பதற்கு முன் கொஞ்சம் வரலாறு.

2000 - 2019 கச்சா எண்ணெய் விலை நிலவரம்
 

2000 - 2019 கச்சா எண்ணெய் விலை நிலவரம்

2000-ம் ஆண்டுகளில் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 25 டாலரில் இருந்து அதிகரிக்கத் தொடங்கி 2008-ல் தன் வாழ்நாள் உச்சமான 140 டாலரைத் தொட்டது. ஆமாங்க. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 140 டாலர். அதன் பின் கொஞ்சகொஞ்சமாக இறங்கி 2014-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 105 டாலருக்கு வந்தது, அதன் பின் இப்போது ஜனவரி 10, 2019 நிலவரப்படி ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கு கிடைக்கிறது.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம்

கச்சா எண்ணெய் விலை ஏற்றம்

1. டிசம்பர் 2016-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 55 டாலராக இருந்தது.
2. ஆகஸ்டு 2018-ல் அப்படி இப்படி என கொஞ்சகொஞ்சமாக கச்சா எண்ணெய் விலை தேறி
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 71 டாலராக அதிகரித்தது.

ஈரான் தடை

ஈரான் தடை

3. அக்டோபர் 2018-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 86 டாலராக அதிகரித்தது. காரணம் அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடை. யாராவது மீறி வாங்கினால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாவீர்கள் என மிரட்டி இருந்ததால். ஈரானிடம் வாங்கியவர்கள் எல்லாம் இப்போது மற்றவர்களிடம் வாங்க வேண்டி இருந்தது. அதனால் நன்றாக விலை ஏறியது.

அவன்கிட்ட வாங்கலாம்

அவன்கிட்ட வாங்கலாம்

ஒருவழியாக ட்ரம்ப் மனமிறங்கி ஈரானிடம் எண்ணெய் வாங்கலாம் எனச் சொன்னது தான் தாமதம். கச்சா எண்ணெய் விலை சரியத் தொடங்கியது.
அக்டோபர் 2018-ல் 86 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், படிப்படியாகச் சரிந்து டிசம்பர் 2018-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 50 டாலருக்கு வந்துவிட்டது. ஆனால் பெட்ரோல் விலை மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை.

100% வளர்ச்சி பெட்ரோல் விலையில்

100% வளர்ச்சி பெட்ரோல் விலையில்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் பெட்ரோல் விலை 100 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருக்கிறது. பாஜக ஆட்சிக் காலத்தில் பெட்ரோல் விலை 5.6 சதவிகிதம் குறைந்திருக்கிறது என சோலாபூர் தேர்தல் பிரசாரத்தில் சொல்லி இருக்கிறார் மோடி. அது உண்மையா..?

2004 - 2014 கச்சா எண்ணெய் Vs பெட்ரோல்

2004 - 2014 கச்சா எண்ணெய் Vs பெட்ரோல்

1. ஜனவரி 2004-ல் கச்சா எண்ணெய் விலை $33.05 - பெட்ரோல் விலை ரூ.36.79
2. ஆகஸ்டு 2005-ல் கச்சா எண்ணெய் விலை $68.94 - பெட்ரோல் விலை ரூ.44.26
3. ஜனவரி 2007-ல் கச்சா எண்ணெய் விலை $58.14 - பெட்ரோல் விலை ரூ.49.67
4. ஜனவரி 2008-ல் கச்சா எண்ணெய் விலை $140.01 - பெட்ரோல் விலை ரூ.49.61
5. ஜனவரி 2009-ல் கச்சா எண்ணெய் விலை $41.68 - பெட்ரோல் விலை ரூ.44.24
6. ஏப்ரல் 2011-ல் கச்சா எண்ணெய் விலை $113.93 - பெட்ரோல் விலை ரூ.61.93
7. செப்டம்பர் 2011-ல் கச்சா எண்ணெய் விலை $79.20 - பெட்ரோல் விலை ரூ.70.82
8. பிப்ரவரி 2012-ல் கச்சா எண்ணெய் விலை $107.07 - பெட்ரோல் விலை ரூ.69.55
9. ஏப்ரல் 2014-ல் கச்சா எண்ணெய் விலை $99.74 - பெட்ரோல் விலை ரூ.74.60

2014 - 2019 கச்சா எண்ணெய் Vs பெட்ரோல்

2014 - 2019 கச்சா எண்ணெய் Vs பெட்ரோல்

1. ஜனவரி 2014-ல் கச்சா எண்ணெய் விலை 105 டாலர் - பெட்ரோல் விலை ரூ.75.71
2. டிசம்பர் 2016-ல் கச்சா எண்ணெய் விலை 55 டாலர் - பெட்ரோல் விலை ரூ. 68.41
3. ஆகஸ்டு 2018-ல் கச்சா எண்ணெய் விலை 71 டாலர் - பெட்ரோல் விலை ரூ. 81.59
4. அக்டோபர் 2018-ல் கச்சா எண்ணெய் விலை 50 டாலர் - பெட்ரோல் விலை ரூ.82.65
5. இப்போது ஜனவரி 10, 2019 நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரொல் விலை 71.47 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள்.

அட உண்மை தான்..?

அட உண்மை தான்..?

ஆம். மோடி சொன்னது உண்மை தான் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் 2004-ல் 36.79-ஆக இருந்த பெட்ரோல் விலை 2014 ஏப்ரல் மாதத்தில் 74.60 ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் 2014-ல் 75.71 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இப்போது 71.47 ரூபாயாக குறைந்திருக்கிறது. சொன்ன படி 5.6% குறைந்திருக்கிறது.

ராகுல் கேள்வி 2

ராகுல் கேள்வி 2

எங்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 140 டாலருக்குப் போனது. ஆனால் மக்களுக்கு சிரமம் கொடுக்காமல் பெட்ரோல் விலையை 49 - 55 ரூபாய்க்குள்ளேயே நிலையாக விற்றோம். கச்சா எண்ணெய் விலை குறைந்த உடன் ஜனவரி 2009-ல் மீண்டும் பெட்ரோலின் விலை 44.54 ரூபாய்க்கு விற்றோம். இந்த 44.54 என்பது 2005-ல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலை. இது போல மோடி செய்தாரா..?

பெட்ரோல் விலை குறைந்ததா..?

பெட்ரோல் விலை குறைந்ததா..?

ராகுல் காந்தி சொல்வது போல, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 2014-ல் (105 டாலர்) இருந்ததை விட 2016-ல் (55 டாலர்) சுமார் 50 சதவிகிதம் குறைந்தும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2014-ல் இருந்ததை விட 2016-ல் வெறும் 9 சதவிகிதம் மட்டுமே குறைத்தார்கள். ஜனவரி 2014-ல் சென்னையில் 75.77 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரொல் விலை, டிசம்பர் 2016-ல் 68.40 ரூபாய்க்கு விற்று கல்லா கட்டினார்கள். இப்போது ஜனவரி 10, 2019 நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரொல் விலை 71.47 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள்.

50% எங்கே, 9% எங்கே

50% எங்கே, 9% எங்கே

மேலே சொன்னது போல் 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 105 டாலரில் இருந்து இறக்கம் கண்டு டிசம்பர் 2016-ல் அதே ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 55 டாலருக்கு விற்பனை ஆனது. ஆனால் மோடி அரசு மக்களுக்கு சுமையைக் குறைத்து பொருட்களை விலை குறைவாக விற்க வேண்டும் என்கிற எண்ணத்துக்கு பதிலாக நாட்டை நடத்துகிறேன் பேர்விழி என விட்ட காசை எடுக்க நினைத்தார். அதாவது கச்சா எண்ணெய் ஒரு பேரல் 105 டாலருக்கு விற்ற போது ஒரு லிட்டர் பெட்ரொல் 75 ரூபாய். அதே ஒரு பேரல் கச்சா எண்ணெய் 55 டாலருக்கு விற்ற போது ஒரு லிட்டர் பெட்ரோல் 68 ரூபாய். மக்களை அப்பட்டமாக ஏமாற்றிவிட்டு இப்போது எங்கள் ஆட்சிக் காலத்தில் தான் விலை ஏறியது என்றால் எப்படி மோடிஜி...?ன கிடுக்கிப் பிடி போடுகிறார் ராகுல்.

பதில் எங்கே..?

பதில் எங்கே..?

ரஃபேல் ஊழலுக்கு மோடிஜி எப்படி பாராளுமன்றத்துக்கு போய் பதில் சொல்லவில்லையோ... அதே போல் ராகுலின் பெட்ரோல் விலை கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. எது எப்படியோ வர வர ராகுல் கொஞ்சம் விவரமாக கேள்விகளை கேட்கத் தொடங்கிவிட்டார். பாஜக சொம்பு என்று திட்டுபவர்கள் இந்த தரவுகளை முழுமையாக ஆராய்ந்துவிட்டு, ராகுலுக்கு பதில் சொல்லச் சொல்லி மோடிக்கு டிவிட்டவும்.

மோடி கேள்வி 2

மோடி கேள்வி 2

மாதம் இருமுறை பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தான், அதனால் தான் நாங்கள் அதை தினமும் மாறக் கூடியதாக மாற்ற வேண்டி இருந்தது என சிறு பிள்ளைத் தனமாக குற்றம் சாட்டி இருக்கிறார் மோடி.

அவரே சொல்லிட்டாரே..!

அவரே சொல்லிட்டாரே..!

ஆனால் ராகுலோ "மோடியே எனக்கான விடையையும் சொல்லிவிட்டாரே... நாங்கள் சராசரியாக நஷ்டமடையாமல் இருக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு வழி சொன்னோம். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க தினமும் விலை ஏற்றி விற்க வழி செய்த மோடியை என்னவென்று சொல்ல" என ராகுல் வேற லெவலில் மோடியை தாலித்திருக்கிறார். இதற்கும் மோடி வழக்கம் போல் சைலெண்ட் மோடிக்குப் போய்விட்டார். ஆனால் மன்மோகனை மட்டும் பொமை பிரதமர் என ஓட்டுவார் மோடி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: modi rahul gandhi petrol crude
English summary

rahul gandhi and modi is fighting on petrol price issue

rahul gandhi and modi is fighting on petrol price issue
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X