நாட்டின் சில்லறை பணவீக்கமும், மொத்த விலை குறியீட்டு எண் பணவீக்கமும் சரிவடைந்துள்ளது. பழங்கள், காய்கறிகள் மற்றும் எரிபொருள் விலைகுறைவு காரணமாக பணவீக்கம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: நாட்டின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக 3.80 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. நாட்டின் சில்லரை பணவீக்கம் 2018 டிசம்பர் மாதத்தில் 2.19 சதவீதாக இருந்தது. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவாகும் இது. பழங்கள், காய்கறிகள் மற்றும் எரிபொருள் விலைகுறைவு காரணமாக பணவீக்கம் குறைந்துள்ளது.
மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பணவீக்கத்தை மத்திய அரசு வெளியிடும். இதன்படி நவம்பர் மாதம் 4.64% ஆக இருந்த பணவீக்க விகிதம் டிசம்பரில் 3.80% ஆகக் குறைந்துள்ளது. 2017ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பணவீக்கம் 3.58% ஆக இருந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியிலும் தனிநபர் வருவாயிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பணவீக்கத்தை எளிமையாக சொல்வதென்றால், தேவைக்கும் வழங்கலுக்கும் இடையில் (Demand and supply) உள்ள வித்தியாசமாகும். தேவை அதிகமாகவும் உற்பத்தியும் விளைச்சலும் குறைவாகவும் இருந்தால் பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கம். அதற்கு மாறாக தேவை குறைவாகவும் விளைச்சல் அதிகமாகவும் இருக்குமானால் பணவீக்க (பணவாட்டம்) விகிதம் குறைவாகவும் இருக்கும். கடந்த எட்டு மாதங்களில் கச்சா எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் பணவீக்கம் குறைந்ததன் பயனாக டிசம்பரில் பணவீக்கம் குறைந்துள்ளது என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
நுகர்பொருள் விலைகுறியீட்டெண்
நுகர்பொருள் விலைகுறியீட்டெண் (CPI) அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. இதுநவம்பர் மாதத்தில் 2.33 சதவீதமாக இருந்தது. 2017-ம் ஆண்டு டிசம்பரில் இது 5.21 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2017 ஜூன் மாதத்தில் மிகக் குறைந்த அளவாக பணவீக்கம் 1.46 சதவீத அளவுக்கு இருந்தது.
உணவுப் பொருள் பணவீக்கம்
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்ட தகவலின்படி உணவுப் பொருள் பணவீக்கம் டிசம்பரில் 2.51சதவிகிதமாக இருந்தது. அது நவம்பரில் மைனஸ் 2.61 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விலை சரிவுக்குக் காரணம்
காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை குறைந்ததும் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இருப்பினும் இறைச்சி, மீன் மற்றும் தானியங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. டிசம்பரில் எரிபொருள் பணவீக்கம் 4.54 சதவீதமாக இருந்தது. இது நவம்பரில் 7.39 சதவீதமாக இருந்தது.
பணவீக்க விகிதம்
மொத்தவிலை குறியீடு மீதான பணவீக்கம் 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு டிசம்பரில் 3.80 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது. ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஆண்டு நவம்பரில் 4.64 சதவிகிதமாக இருந்தது. கடந்த 2017 டிசம்பரில் இது 3.58 சதவிகிதமாக இருந்தது.
பெட்ரோல் டீசல் விலை குறைவு
எரிபொருட்களின் பணவீக்கம் நவம்பரில் 16.28% ஆக இருந்தது எனவும் அது டிசம்பரில் பாதியாகக் குறைந்து 8.38% ஆக உள்ளது எனவும் அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது டிசம்பரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது. டிசம்பர் மாதம் பெட்ரோல் மீதான பணவீக்கம் 1.57 சதவிகிதமாகவும், டீசல் மீதான பணவீக்கம் 8.61 சதவிகிதமாகவும், எல்பிஜி மீதான பணவீக்கம் 6.87 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.
பருப்பு காய்கறிகள், மீன்
உணவுப்பொருட்களின் பணவீக்கம் நவம்பரில் 3.31% ஆகவும் டிசம்பரில் 0.07% ஆகவும் குறைந்துள்ளது. காய்கறிகளின் பணவீக்கம் இதே நவம்பர் - டிசம்பர் மாதங்களில் 26.98% என்பதிலிருந்து 17.55% வரை சரிந்துள்ளது. பருப்பு மீதான பணவீக்கம் 2.11 சதவிகிதமாகவும், முட்டை, கறி மற்றும் மீன் மீதான பணவீக்கம் 4.55 சதவிகிதமாகவும் உள்ளது. உணவு மற்றும் எரிபொருள் விலை குறைவால் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு நாட்டின் பணவீக்க விகிதம் சரிவடைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications