கடனை இன்றைய நுகர்வோர் சமூகம் ஒரு வளர்ச்சியின் குறியீடாகவே பார்க்கிறது. அதற்குச் சான்று தான் பெங்களூரூ. பேங்க் பசார் எனும் தனியார் நிறுவனத்தின் 2018-ம் ஆண்டு அறிக்கையில் சில சுவாரஸ்யத் தகவல்கள் இதோ... இந்த தகவல்கள் எல்லாமே பேங்க் பசார் மூலம் வாங்கிய கடன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு தயாரித்திருக்கிறார்கள்.
தனி நபர் கடன் (Personal loan)
இந்தியாவில் தனி நபர் கடனில் அதிகம் கடன் வாங்கியவர் பெங்களூரைச் சேர்ந்தவர். ஒரே முறையில் 47.2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். பெங்களூரில் சராசரியாக தனி நபர் கடன் 2.7 லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள். இந்தப் பட்டியலில் சென்னைவாசிகளுக்கு ஐந்தாவது இடம் தான்.
சென்னையில் தனி நபர் கடன்
சென்னையில் ஒரு நபர் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். சென்னையிலும் சராசரியாக தனி நபர் கடன் வாங்குபவர்கள் 2.7 லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள். சராசரி அடிப்படையில் மும்பை 2.8 லட்சம் ரூபாயோடு முதலிடத்தில் இருக்கிறது.
வாகனக் கடன்
வாகனக் கடனிலும் (கார் கடன்கள் மட்டும்) பெங்களூரு தான் முதலிடத்தில் இருக்கிறது. பெங்களூரில் அதிகபட்சமாக ஒரு நபர் 49.9 லட்சம் ரூபாய் கார் கடன் வாங்கி இருக்கிறார். சென்னை நபர் 46.8 லட்சம் கடன் வாங்கி இரண்டாமிடத்திலும், தில்லி நபர் 21.8 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மூன்றாமிடத்திலும் இருக்கிறார்கள்.
டயர் 2 மற்றும் டயர் 3
இந்தியாவின் மெட்ரோ நகரங்களைத் தவிர மற்ற சிறு நகரங்களில் கார் இன்னும் சொகுசாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்கத்தைச் சேர்த்து ஒரு நபர் 12.9 லட்சம் ரூபாய்க்கு கார் கடன் வாங்கி இருக்கிறார். அது தான் மொத்த இந்திய நகர் புறத்துக்கும் அதிகமான கடன் தொகையாம்.
பகுதி நகர் புறம் & கிராம புறம்
பகுதி நகர் புறங்களில் (Semi Urban) அதிகபட்ச கார் கடன் தொகையாக 5.7 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்களாம். ஆனால் கிராம புறங்களில் அதிகபட்ச கார் கடன் தொகையாக 5.2 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வாங்கி இருக்கிறார்களாம்.
வீட்டுக் கடனில்
வீட்டுக் கடன்ல் தில்லிவாலாக்கள் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வாங்கி முதலிடத்திலும், சென்னைவாசிகள் 2.2 கோடி ரூபாய் கடன் வாங்கி இரண்டாமிடத்திலும், 1.8 கோடி ரூபாய் கடன் வாங்கி மும்பை வாசிகள் மூன்றாமிடத்திலும் இருக்கிறார்களாம். ஆக வீடு போன்ற அதிக நிலையான சொத்துக்கள் மீது கடன் வாங்குவதில் பெங்களூரூ பின் தங்கிவிட்டது.
அதெல்லாம் கிடையாதுங்க
இந்த அறிக்கைக்கு முரணாக ஒரு எஸ்பிஐ ஊழியர் "என்னைப் பொறுத்த வரை தனி நபர் மற்றும் கார் கடன்களில் மும்பை நகரம் தான் முதலிடம் பிடிக்கும். பெரும்பாலான கடன் விவரங்களை மும்பை வாலாக்கள் வங்கிகளுக்கே நேரடியாக வந்து கேட்டுச் செல்கிறார்கள். எனவே இந்த பேங்க் பசார் அறிக்கையை பெரிதாக நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை" என்கிறார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications