உலகின் வலுவான தேசங்களில் இன்று சீனாவை சேர்க்காமல் பட்டியலை எழுத முடியாது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் சொன்ன நமக்கு நாமே திட்டத்தை 1978-களிலேயே தொடங்கியவர்கள். அந்த கால கட்டங்களில் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்தவர்கள் இன்று அமெரிக்காவுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் என்ன செய்ய நம் எல்லைக் கோட்டை ஆக்கிரமிக்கும் எதிரியாகவே நிற்கிறார்களே..! இப்போது இன்னொரு பிரமாண்ட விஷயத்தை வேறு செய்திருக்கிறார்கள்.
என்ன..?
உலகின் மிகப் பெரிய ராணுவம் சீனாவினுடையது தான். 20 லட்சம் பேர் ஒட்டு மொத்தமாகச் சீன ராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். இப்போது தன் காலாட் படைக்கு ஆட்களைக் குறைத்துக் கொண்டு விமானப் படை மற்றும் கப்பற் படைக்கு ஆட்களை அதிகம் அனுப்பி வைக்கிறார்களாம். இதைச் சீனாவின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) என்கிற சீன பத்திரிகை உறுதிப்படுத்தி இருக்கிறது.
காலாட் படையில் குறைப்பு
முன் காலாட் படையில் இருந்த மொத்த துருப்புகளில் 50% பேரை வேறு பணிக்கு மாற்றி இருக்கிறார்கள் அல்லது வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அதிகாரிகள் நிலையில் 30% பேரை வேறு பல வேலைகளுக்கு மாற்றம் செய்திருக்கிறார்கள் அல்லது வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்களாம்.
மாற்றம்
முன்பு PLA - People Liberation Army-ல் பெரும்பாலான பகுதி காலாட் படை வீரர்களாகத் தான் இருப்பார்கள். இப்போது மொத்த PLA-வில் 50%க்குக் கீழ் தான் காலாட் படையினர். மீதமுள்ளவர்கள் எல்லாம் கப்பற் படை, விமானப் படை தவிர, ஏவுகணைப் படை, போர்க்கால முக்கிய உதவிப் படை, சைபர் போர்ப் படை என பல்வேறு புதிய படைகளுக்கு நிரம்ப ஆட்களை மாற்றம் செய்திருக்கிறார்களாம்.
இதற்கு முன்
1927-ல் தொடங்கப்பட்ட PLA-க்கு 1949 வரை விமானப் படையோ, கப்பற் படையோ கிடையாது. 1949-ல் தான் விமானம் மற்றும் கப்பல் படை நிறுவப்பட்டது. 2013-ம் ஆண்டில் PLA-வில் 23 லட்சம் பேர் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். கப்பற் படையில் 2.35 லட்சம் பேரும், விமானப் படையில் 3.98 லட்சம் பேர் மட்டுமே இருந்தார்கள்.
புதிய படைகள்
2015 - 16 ஆண்டு வாக்கில் தான் சீனாவின் நிரந்தர அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் போர் கால ஏவுகணைப் படை (strategic and tactical missile operator) மற்றும் சைபர் போர், விண்வெளிப் போர்களுக்கான படைகள் (strategic support force) அமைக்கப்பட்டன. அதுவரை சீனாவும் சாதா ராணுவம் போல காலாட் படை, விமானப் படை மற்றும் கப்பற் படையில் தான் கவனம் செலுத்தி வந்தது.
விமானம் தாங்கிக் கப்பல்
தற்போது சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கிக் கப்பல் தான் இருக்கிறது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் சீனாவிடம் 5 -6 விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும். இப்படித் திட்டமிட்டு தன் படைகளை பக்காவாக வலுப்படுத்துகிறது சீனா.
அனலிஸ்டு கருத்து
ஷாங்காய் நகரத்தைச் சேர்ந்த ராணுவ அனலிஸ்டு நி லெசியாங் (Ni Lexiong) "சீனா தன் எல்லையில் வரும் எதிரிகளைத் தடுப்பது தாக்குவது என்றிருந்த நிலையை விட்டு எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தாக்கக் கூடிய ஒரு பலம் பொருந்திய ராணுவ வீரனாக உருவாகி வருகிறது."
இனி எதிர்காலத்தில்
இப்போதே காலாட் படைகள் மூலம் தாக்குதல்கள் நடக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு நினைத்த இலக்குகளைத் தாக்கும் படி விமானப் படை, விண்வெளிப் படை மற்றும் சைபர் படைகளை அதிவேகமாக, உருவாக்கியது சீனாவுக்கு கிடைத்த வரம்" என்கிறார்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications