மீம்.. மீம்.. மீம் மட்டும்தான்.. வருகிறது பேஸ்புக்கின் புதிய ஆப் ''லோல்''.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சென்னை: மீம்களுக்கு என்று பிரத்யோகமாக பேஸ்புக் புதிதாக லோல் (LOL) என்று ஆப்பை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த 2018ம் வருடம் கொஞ்சம் மோசமானது என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற வருடம் முழுக்க பேஸ்புக் டேட்டா திருட்டு பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டு இருந்தது. அதோடு பேஸ்புக்கிற்கு போட்டியாக வாரம் ஒரு ஆப் ஒன்று வந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது பேஸ்புக் ''சிங்கப் பாதையில்'' இறங்கி இருக்கிறது. விரைவில் நிறைய அதிரடி மாற்றங்களை அந்த நிறுவனம் செய்ய இருக்கிறதாம்.

மவுசு குறைந்தது

மவுசு குறைந்தது

கடந்த வருடம் முழுக்க டிக்டாக், டிண்டர், ஸ்னாப்ஷாட் ஆகிய ஆப்கள்தான் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த ஆப்களின் வருகையாலும், திடீர் விஸ்வரூபத்தாலும் பேஸ்புக் பெரிய அளவில் பாதித்தது. பேஸ்புக்கில் புதிதாக சேரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

புதிய வசதி

புதிய வசதி

இதன் காரணமாகவே பேஸ்புக்கில் டேட்டிங் செய்யும் வசதியை கடந்த வருடம் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தினார். தற்போது இதன் சோதனை வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது. இன்னும் சில வாரத்தில் இது இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும். இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய ஆப்

புதிய ஆப்

இது இல்லமால் தற்போது மீம்களுக்கு என்று பிரத்யோகமாக பேஸ்புக் புதிதாக லோல் (LOL) என்று ஆப்பை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. புதிய போட்டிகளை சமாளிக்கும் வகையிலும் மக்களை அதிகம் ஈர்க்கும் வகையில் இந்த லோல் (LOL) ஆப் கொண்டு வரப்பட உள்ளது. இது தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

எதற்கு முக்கியத்துவம்

எதற்கு முக்கியத்துவம்

இதில் முழுக்க முழுக்க மீம்களுக்கு முக்கியத்துவமும் அளிக்க இருக்கிறார்கள். அதாவது இந்த ஆப்பில் மீம் மட்டுமே இருக்கும். உலகம் முழுக்க பலர் ஷேர் செய்திருக்கும் மீம்களை இதில் பார்த்துக்கொள்ள முடியும். மீம்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எப்படி செயல்படும்

எப்படி செயல்படும்

பேஸ்புக்கில் இருக்கும் மீம் பேஜ்கள் வெளியிடும் மீம்கள் இதில் வரும். அதேபோல் நாமும் இதில் பக்கம் உருவாக்கி மீம்களை வெளியிடலாம். இன்ஸ்டாகிராம் போல செயல்படும் இது மீம் போடுவதற்காக மட்டும் பயன்படும். இதிலேயே மீம் உருவாக்கும் வசதியும் இருக்குமாம்.

ஏற்கனவே இருக்கிறது

ஏற்கனவே இருக்கிறது

தற்போது இதை பேஸ்புக் நிறுவனம் சோதனை செய்து வருகிறது என்கிறார்கள். இதன் பீட்டா வர்ஷன், பல கல்லூரிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறுகிறார்கள்.

ஆனால் அறிவிப்பு இல்லை

ஆனால் அறிவிப்பு இல்லை

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேஸ்புக் இன்னும் வெளியிடவில்லை. இதனை பேஸ்புக் வெளியிடுமா இல்லை கைவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள்டெக் ஜாம்பவான்கள்!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+