தேர்தல் நேரங்களில் தான் அரசியல் வாதிகள் வயிற்றில் இருக்கும் கறுப்புப் பணம் வெளியே வரும். அந்த கறுப்புப் பணத்தில் தான் மக்களுக்கு லஞ்சம் கொடுப்பது, மது வாங்கிக் கொடுப்பது, கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பது, பேனர் அடிப்பது எல்லாம் எல்லாம் நடக்கும்.
இப்போது
இந்த 2019-ல் எல்லா டிரெண்டுகளும் மாறும் போது தேர்தல் டிரெண்டுகள் மட்டும் மாறாதா என்ன..? இன்று கட்சிகள் ஆன்லைனில் சூடாக விவாதம் செய்கின்றன. மோடியின் கருத்துக்கு தமிழிசை தமிழ் வாய்ஸ் கொடுக்கிறார். கனிமொழியின் டிவிட்டுகள் வட இந்தியாவில் வைரலாகிறது இப்படி எல்லாமே டிஜிட்டல் ஆகிவிட்டது.
விளம்பரம்
கட் அவுட் வைத்துக் கொண்டிருந்த அதே கட்சியினர்கள் இப்போது ஆன்லைனில் கட்டம் கட்டி குட்டி கட் அவுட்களை கூகுளிடம் விலை பேசி வாங்குகிறார்கள். கூகுளுக்கு எப்படி பேமெண்ட் செய்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் இனி கூகுள் மூலம் அரசியல் வாதிகள் தங்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கவோ, செலவு செய்யவோ முடியாது.
ஏன்..?
2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கூகுள் நிறுவனமும், இந்திய தேர்தல் ஆணையமும் இணைந்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். அதன் படி கூகுள் தன்னிடம் அரசியல் விளம்பரம் கொடுக்கும் நபர்களின் விவரங்களோடு, எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதையும் வெளிப்படையாக காட்ட இருக்கிறது. வரும் மார்ச் 2019-ல் இருந்து இந்த லைப்ரரி செயல்பட இருக்கிறது.
லைப்ரரி
அறிக்கைகள் ஒவ்வொரு வாரத்துக்கு வெளியாகும். அந்த அறிக்கையில் ஒரு வாரத்தில் யார் யார் எல்லாம் அரசியல் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள், எத்தனை ரூபாய் அரசியல் விளம்பரத்துக்கு செலவு செய்திருக்கிறார்கள், எந்த கட்சிக்கு செய்திருக்கிறார்கள் போன்ற விவரங்கள் இருக்குமாம். அதோடு அந்த வாரத்தில் என்ன மாதிரியான விளம்பரங்கள் புழக்கத்தில் இருந்தன போன்ற பல சுவாரஸ்ய விவரங்களும் இருக்குமாம்.
பதிவிறக்கம்
அட ஆமாங்க. இந்த அறிக்கைகளை நம் கணிணி மற்றும் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாமாம். அதோடு இந்த அரசியல் விளம்பர லப்ரரிக்காகவே சில API - Application programming interface-களையும் கூகுள் தயாரித்திருக்கிறதாம்.
வரவேற்பு
இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் கம்யூனிகேஷன் பிரிவின் பொருப்பாளர் திவ்யா ஸ்பந்தனா மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரின் சமூக வலைதள ஸ்ட்ராட்டஜிஸ்ட் அன்கித் லால் ஆகியோர்கள் தங்கள் கட்சியின் ஆதரவைப் பதிவு செய்து வரவேற்றிருக்கிறார்கள்.
கணக்கு காட்டு
தேர்தல் ஆணையம் ஒரு போட்டியாளர் இவ்வளவு ரூபாய் தான் தேர்தலுக்காக செலவழிக்க வேண்டும் என வரையறுக்கும். எப்போது தங்கள் இஷ்டத்துக்கு கணக்குகளைச் சொல்வார்கள். ஆனால் இப்போது முதல் முறையாக ஆன்லைன் விளம்பரங்களுக்கு கூகுள் தன் கணக்குகளை அப்படியே சொல்லி விடுகிறது. எனவே இனி ஆன்லைன் விளம்பரத்துக்கு, போட்டியாளர்கள் செய்யும் செலவுக்கு பொய் கணக்கு காட்ட முடியாது. அப்படிக் காட்டினால் தேர்தல் ஆணையம் நேரடியாக கூகுளிடம் இருந்து வாங்கி சரி பார்த்துவிடும். எனவே இனி கறுப்புப் பணத்தை வெளிப்படையாக ஆன்லைன் விளம்பரத்துக்கு செலௌ செய்ய முடியாது. செய்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
கருத்து சொல்லலங்க
ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இந்த முடிவுக்கு யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதோடு திமுக, ஆதிமுக போன்ற தமிழகத்தின் முன்னனி கட்சிகளும் இது குறித்துப் பேசவில்லை.


Click it and Unblock the Notifications