நான் இந்திய இணைய பிசினஸில் நம்பர் 1 ஆகணும், ஆசைப்படுவது அம்பானி..!

தமிழகத்தின் உலக முதலீட்டாளர் மாநாடு 2019 நட்டத்தப்பட்டது போல குஜராத்திலும் வைப்ரண்ட் குஜராத் என்கிற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் முகேஷ் அம்பானி பேசி இருக்கிறார்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தின் உலக முதலீட்டாளர் மாநாடு 2019 நட்டத்தப்பட்டது போல குஜராத்திலும் வைப்ரண்ட் குஜராத் என்கிற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் முகேஷ் அம்பானி பேசி இருக்கிறார்.

ஜியோ பாய்ச்சல்

ஜியோ பாய்ச்சல்

இந்தியாவில் போன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடி பேராக அதிகரித்திருக்கிறது. அதில் பிராட்பேண்டு சேவைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 கோடி பேராக இருக்கிறார்கள். இந்த 50 கோடி பேரில் 97% சதவிகிதத்தினர் 48.5 கோடி பேர் வொயர்லெஸ் முறையில் தான் பிராட்பேண்ட் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

அதில் நான்

அதில் நான்

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கைகளில் 28 கோடி பேரை ஜியோ இரண்டே வருடத்தில் வளைத்துப் போட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் இலவச டேட்டா திட்டங்கள் மற்றும் விலை மலிவான டேட்டா திட்டங்கள்.

எக்கனாமிஸ்ட் கருத்து
 

எக்கனாமிஸ்ட் கருத்து

"அத்தனை ஒழுங்கு படுத்தப்படாத இந்திய இணைய வெளியை ஒரு நிறுவனத்தால் வெறும் இரண்டே ஆண்டுகளில் 28 கோடி பேரை தன் வசம் இழுக்க முடியுமென்றால் நிச்சயம் அம்பானியால் இந்தியாவின் மொத்த இணைய வெளியையும் ஒரு சர்வாதிகாரி போல ஆள முடியும்" என The Economist பத்திரிகை கணித்திருக்கிறது.

அவர் பிசினஸ்

அவர் பிசினஸ்

ஜியோ மூலம் நேரடியாக அம்பானி காசு பார்ப்பதை விட கிரிக்கேட் மேட்சுகளை ஜியோ டிவியில் ரிலே செய்வது, டிஸ்னி திரைப்படங்களை ஜியோ டிவியில் ரிலே செய்வது போன்ற விஷயங்களால் பயங்கரமாக சம்பாதித்து வருகிறது. என்றும் எக்கனாமிஸ்ட் உறுதிப்படுத்துகிறது.

வைப்ரண்ட் குஜராத்

வைப்ரண்ட் குஜராத்

குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி "அடுத்த 10 வருடத்தில் ரிலையன்ஸ் தன் முதலீட்டையும், வேலை வாய்ப்புகளையும் இரட்டிப்பாக்கும்" என முழங்கி இருக்கிறார். அதோடு டேட்டா காலனைசேஷனை எதிர்த்துப் போராடவும் பிரதமரை வலியுறுத்தி இருக்கிறார்.

முதலில் குஜராத்

முதலில் குஜராத்

ரிலையன்ஸ் ரீடெயில் மூலம் ஒரு புதிய சில்லறை வணிகக் கடையை திறந்து அதில் சிறு குறு சில்லறை வியாபாரிகளை பொருளை விற்பன்னை செய்யும் திட்டத்தை முதலில் குஜராத்தில் தொடங்க இருக்கிறாராம்.

லாபம்

லாபம்

கடந்த அக்டோபர் - டிசம்பர் 2018 காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் நிகர லாபம் 65 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். ஜூன் காலாண்டில் 504 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம், டிசம்பர் காலாண்டு முடிவில் 831 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ambani wants to become the biggest indian internet business man

ambani wants to become the biggest indian internet business man
Story first published: Friday, January 25, 2019, 14:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X