டிசம்பர் மாதம் வெளியான ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தது. அதே நேரத்தில் காங்கிரஸ்-க்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. சொன்னது போல் ஒவ்வொரு மாநில முதல்வர்களாக தங்கள் மாநில விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார்கள்.
மத்தியப் பிரதேசத்தில்
மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத் முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கி இருக்கும் அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இந்த திட்டத்துக்கு ஜெய் கிஷன் என பெயரும் சூட்டினார்கள். ஜெய் கிசான் என்றால் வாழ்க விவசாயி எனப் பொருளாம்.
சிவநாராயன்
அகர்மால்வா என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்களும் தங்கள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யௌம் படிவத்தில் கையெழுத்து போட வாங்கிய் அபோது அதிர்ந்து விட்டார். காரனம் வெறும் 13 ரூபாய் தான் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்தப் படிவம் நிரப்பப் பட்டிருந்தது. ஆனால் அவர் வாங்கிய தொகை 20,000 ரூபாய்.
சிவலால்
இவரும் சிவநாராயனின் கிராமத்து வாசி தான். இவரும் 20,000 ரூபாய் மட்டுமே கடன் வாங்கி இருந்தார்கள். ஆனால் இவர் படிவத்தில் வெறும் இரண்டு ரூபாய் தான் தள்ளுபடி தொகையாக நிரப்பப் பட்டிருந்தது. கிராமத்து வாசிகளுக்குத் தான் இந்த பிரச்னை. மற்ற இடங்களில் எல்லாம் எப்படி இருக்கிறது என்றால் கண்ணீர் தான் வருகிறது.
முதல்வர் தொகுதி
கார்கோன் (Khargone) தொகுதியில் நின்று வெற்றி பெற்று தான் இப்போது கமல் நாத் முதல்வராக இருக்கிறார். அவருடைய தொகுதிகளில் கூட நித மாதிரி கோல்மால்களை அள்ளிவிட்டிருக்கிறார்கள். 30,000 ரூபாய் கடனுக்கு 232 ரூபாய் தள்ளுபடி, 50,000 ரூபாய் கடனுக்கு 842 ரூபாய் தள்ளுபடி என விவசாயிகளை கடுப்பேத்தி இருக்கிறார்கள்.
அரசு வங்கிகள்
தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளில் கடன் வாங்கி இருப்பவர்களை கட்டாயம் ஆங்கிலம் படித்துப் பார்த்து படிவங்களை நிரப்பி கடனைத் தள்ளுபடி செய்து கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள். விவசாயிகளோ "எங்களுக்கு ஹிந்தியில் படிவம் இருந்தா நல்ல இருக்கும்" என வங்கியை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். வங்கியோ தங்களிடம் ஹிந்தியில் படிவங்கள் இல்லை என கடுப்படித்திருக்கிறார்கள்.
ஜெய் கிசான்
இந்த திட்டத்தின் கீழ் 55 லட்சம் விவசாயிகள் ப்யனடைய இருக்கிறார்கள். இதுவ்ரை 31 லட்சம் விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்துவிட்டார்கள்ள். ஹிந்தியில் கடன் தள்ளுபடி படிவத்தைக் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்வோம் என விவசாயத் துறை அமைச்சர் சச்சின் யாதவ் உறுதி அளித்திருக்கிறர். ஆனால் அந்த 5 ரூபாய், 13 ரூபாய், 232 ரூபாய், 842 ரூபாய்களுக்கு பதில் சொல்லவில்லை.
பாஜக
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு விவசாயிகள் சரியான பாடம் புகட்டுவார்கள் என மத்தியப் பிரதேச பாஜக இந்த சந்தர்பத்தை தங்கள் மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications