மூன்று மாதத்தில் 1500 கோடி நிகர லாபம் பார்த்த மாருதி சுஸிகி..! ஆனா டார்கெட் மிஸ் ஆயிடுச்சே..?

இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸிகி கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் 1,489.30 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் 1,799 கோடி ரூபாயை நிகர லாபகா ஈட்டியது.

அனலிஸ்டுகள் கணிப்பு

அனலிஸ்டுகள் கணிப்பு

சந்தை வல்லுநர்கள் மற்றும் பங்குச் சந்தை அனலிஸ்டுகள் மாருதி சுஸிகி நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை, புதிய மாடல்களின் வரவு, மக்கள் கையில் இருக்கும் பணப் புழக்கம், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலைச் சரிவு போன்றவைகளை கணக்கில் கொண்டு டிசம்பர் 2018 காலாண்டில் 1731 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டும் எனக் கணித்திருந்தார்கள். ஆனால் கணிப்பை விட 14 சதவிகிதம் குறைவாகவே ஈட்டியது.

வருவாய்

வருவாய்

ஒரு நிறுவனத்தின் வருவாய் என்பது அந்த நிறுவனம் விற்றும் வரும் காசு. அப்படி மாருதி தன் நிறுவன கார்களை விற்று 19,668 கோடி ரூபாயை ஈட்டியது. கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் டிசம்பர் 2017 காலாண்டில் 19,528 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருந்தது மாருதி சுஸிகி.

எண்ணிக்கை

எண்ணிக்கை

01 அக்டோபர் 2018 முதல் 31 டிசம்பர் 2018 வரையான காலத்தில் 4,28,643 கார்களை விற்று இருக்கிறது. கடந்த 01 அக்டோபர் 2017 முதல் 31 டிசம்பர் 2017 வரையான காலத்தில் விற்ற 4,29,928 வாகனங்களை விடக் குறைவு தான்.

காரணம்

காரணம்

கமாடிட்டிகளின் விலைப் பிரச்னை, கார்களை விற்பதற்கு செய்த செலவுகள் அதிகரிப்பு, அந்நிய செலாவணிச் செலவ்கள், தேய்மானம் அதிகரித்திருப்பது, புதிய மாடல் கார்களைக் கொண்டு வர செய்த செலவுகள், பாரத் ஸ்டேஜ் 6-க்காக இன் ஜின்களில் மாற்றங்கள் கொண்டு வர செய்த செலவுகள் போன்ற காரணிகளால் தன் இந்த காலாண்டு முடிவுகளில் இத்தனை இறக்கங்களாம்.

நிகர வருவாயில் இத்தனை போச்சே

நிகர வருவாயில் இத்தனை போச்சே

ஒரு வாகனத்தை விற்று வரும் தொகையில் 74 சதவிகிதம் மூலப் பொருட்களுக்கான விலை, 15 சதவிகிதம் விற்பனை மற்றும் விளம்பர செலவுகள், மீதமுள்ள 11 சதவிகிதத்தில் மற்ற செலவுகள், வரிகள் எல்லாம் போக வெறும் 7.9 சதவிகிதம் மட்டுமே கைக்கு வருகிறதாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+