அமெரிக்காவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆரக்கில் (Oracle). இந்த ஐடி நிறுவனத்திலும் வழக்கம் போல அமெரிக்கர்களை விட இந்தியர்களும், ஆசியர்களும் தான் பெரிய அளவில் வேலை செய்கிறார்கள்.
பாகுபாடு
ஆனால் சம்பளம் மட்டும் அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு குறைவாகத் தான் தருகிறது ஆரக்கில். உதாரணமாக ஒரு இந்தியர் மேலாளராக இருக்கிறார். ஒரு அமெரிக்கர் மேலாளராக இருக்கிறார் என்றால் அமெரிக்கருக்கு 100 டாலரும், இந்தியருக்கு 5 டாலர் மட்டுமே சம்பளமாகக் கொடுக்கிறார்களாம்.
எத்தனை கோடி
இப்படி அமெரிக்கர் அல்லாதவரகளுக்கு கடந்த ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2016 வரையான மூன்ரு ஆண்டில் மட்டும் சுமார் 2,800 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளத்தை ஏமாற்றி இருக்கிறார்களாம்.
அமெரிக்க தொழிலாளர் அமைப்பு
அரசின் தொழிலாளர் அமைப்பு (US department of Labour) தான் இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வந்து அனைவருக்கும் சமமாக சம்பளம் வழங்க வேண்டும் என ஆரக்கில் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறதாம்.
தேர்வு செய்தல்
ஊழியர்களை தேர்வு செய்யும் போதே இந்தியர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் என வருங்காலத்தில் அதிகம் சம்பளம் கொடுக்கத் தேவை இல்லாத நபர்களைத் தேடி தேடி வடிகட்டி திறமை அடிப்படையில் வேலைக்கு எடுப்பார்களாம்.
குறிப்பாக இவர்கள்
இந்த நிறுவனத்துக்கு வேலைக்கு அதிகம் பெண்களை எடுப்பார்களாம். காரனம் சம்பளம் தங்களுக்கு குறைத்துக் கொடுத்தாலும் கூட்டிக் கொடுத்தாலும் அதிகம் பிரச்னை செய்யாமல் அமைதியாக வேலை பார்ப்பார்கள் என்பது தான் நிறுவனத்தின் கருத்தாம்.
இந்தியர்கள் நிலை
அமெரிக்காவில் உள்ள அனைத்து ஐடி நிறுவனங்களுக்கும் இந்தியா தான் ஐடி ஊழியர்களுக்கான மொத்த சப்ளையர்கள். மேலே சொன்ன 2800 கோடியில் அதிகம் வந்து சேர வேண்டியதும் இந்தியாவுக்குத் தான்.


Click it and Unblock the Notifications