இந்தியாவில் அமேஸானை காலி செய்து அம்பானி வளர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அமெரிக்காவில் அமேஸானை வீழ்த்துவது நடக்காத காரியம் என வால்மார்ட் கூகுளிடமே சொல்லி தன் பிசினஸ் ஒப்பந்தங்களை முறித்துக் கொண்டது.
கூகுள் திட்டம்
கூகுள் நிறுவனத்தின் சர்ச் என்ஜினில் ஒரு பொருளை தேடும் போது, அந்த பொருளை விற்கக் கூடிய சில்லறை வணிகர்களின் வலைதளத்தை மேலே கொண்டு வரச் செய்து நேரடியாக பிசினஸ் பிடித்துக் கொடுப்பேன் என்றது. இந்த திட்டத்துக்கு கூகுள் ஷாப்பிங் ஆக்ஷன் (Google Shopping Action) என்றது.
கூட்டாளி
இதற்கு உலகின் மிகப் பெரிய சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் உடன் கூகுள் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் படி வால்மார்ட் நிறுவனத்தின் கிடைக்கும் பொருட்களை ஒருவர் ஆன்லைனில் தேடுகிறார் என்றால் அவருக்கு முதல் வலைதளமாக வால்மார்ட் நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங்கைக் காட்டும். அதன் மூலம் விற்கப்படும் பொருட்களுக்கு கூகுள் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதஹ்தை கமிஷனாக எடுத்துக் கொள்ளும்.
கூகுள் எக்ஸ்பிரஸ்
கூகுள் மூலம் வால்மார்ட் வலைதளத்தில் பொருட்களை ஆர்டர் செய்யும் நபர்களுக்கு கூகுள் எக்ஸ்பிரஸ் நிறுவனமே டெலிவரியும் செய்துவிடும். இந்த திட்டத்தை அமேஸானின் வளர்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு தான் செய்தது கூகுள். ஆனால் வேலைக்கு ஆகவில்லை.
வால்மார்ட் கருத்து
நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கூகுள் ஷாப்பிங் ஆக்ஷன் மூலம் வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை. தவிர எங்களிடமே டெலிவரி வசதிகளும் இருப்பதால் நாங்கள் கூகுள் ஷாப்பிங் ஆக்ஷன் மற்றும் கூகுள் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு திட்டங்களில் இருந்து விலகிக் கொள்கிறோம் என ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார்களாம்.
கூகுள் பதில்
இதைப் பற்றிப் பத்திரிகைகள் கேட்ட போது கூகுள் சமாளித்துவிட்டதாம். எங்களிடம் நைக், பெஸ்ட் பை, செஃபோரா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என பதிலளித்திருக்கிறார்களாம்.
வால்மார்ட் கருத்து
கூகுள் நிறுவனத்துடனான உறவும், பிசினஸ் விரிவாக்கத் திட்டங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது எனச் சொன்ன வால்மார்ட், கூகுள் ஷாப்பிங் ஆக்ஷன் மற்றும் கூகுள் எக்ஸ்பிரஸ் திட்டங்களைக் குறித்துப் பேசவில்லை. சொல்லி வைத்தாற் போல கூகுள் அதிகாரிகள் வட்டத்திலும் இதே பதிலைத் தான் சொல்கிறார்களாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications