"என் வாழ்கை, நஷ்டத்துல ஓடுற ஜியோ கையில தாங்க இருக்கு" சொல்வது ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் தான் சுனில் மித்தல் ரிலையன்ஸ் ஜியோவால் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு வருவாயே இல்லை எனச் சொன்னார். பிர்லா குழும தலைவர் குமார மங்களம் பிர்லாவோ நேரடியாக டிராய் அமைப்புக்கே அலைக்கற்றை ஏலத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வைக்க வேண்டாம் என விண்ணபமே எழுதிவிட்டார். என்ன தான் நடக்கிறது..? ஏர்டெல் தலைவர் சுனில் மித்தல், பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசியதில் இருந்து...

 

டெலிகாம் பிசினஸ்

டெலிகாம் பிசினஸ்

இந்தியாவில் ஜியோ வந்த பின் எட்டு நிறுவனங்கள் இந்திய டெலிகாம் சந்தையை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதில் பல தொழில்களைச் செய்யும் டாடா குழுமம், அனில் அம்பானியின் அனில் திருபாய் அம்பான் குழுமத்தின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டெலினார், ஏர்செல் என பெரிய ஆட்களே சந்தையை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

கடன் தொகை

கடன் தொகை

இந்தியா மற்ரும் வெளிநாடுகளில் இந்தியாவில் டெலிகாம் சந்தையில் வியாபாரம் செய்து வந்த நிறுவனங்களுக்கு சுமார் 45 - 50 பில்லியன் டாலர் வரை கடன் கொடுத்திருந்தார்கள். ஜியோவின் அழுத்தத்தால் இப்போது நிறுவனத்தை நடத்த முடியாமல் அந்த 50 பில்லியன் டாலரையும் வாராக் கடனாக் அஎழுதிவிட்டார்கள். இன்று இந்தியாவின் டெலிகாம் துறையில் வியாபாரம் பார்க்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் கடன் இருக்கிறது ஏர்டெல் உட்பட.

இணைப்பு
 

இணைப்பு

இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக இருந்த ஐடியா மற்ரும் வொடாஃபோன் இணைக்கப்பட்டதற்கும் ஜியோவின் போட்டி தான் காரணம் என அனைத்துக்கும் முகேஷ் அம்பானியின் ஜியோவையே காரணம் காட்டுகிறார்.

ஸ்பெக்ட்ரம்

ஸ்பெக்ட்ரம்

இந்திய அலைக்கற்றை ஏலம் வேறு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதாகிவிட்டது. எனவே தொழில்நுட்ப ரீதியாக முன்னேற பயன்படுத்த வேண்டிய பணத்தை இப்போது அரசுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கு கட்டணமாக செலுத்திவிட்டதால் கையில் தொழில்சுட்ப ரீதியாக ஏர்டெல்லை மேம்படுத்த கையில் காசு இல்லை என்கிறார் சுனில் மித்தல்.

ஜியோ நஷ்டம்

ஜியோ நஷ்டம்

ஜியோ இதுவரை சுமார் 40 - 45 பில்லியன் டாலரை இந்திய டெலிகாம் சந்தைகளில் முதலீடு செய்துவிட்டது. ஆனால் இதுவரை அவர்கள் நிதி நிலை அறிக்கைகளில் ஒரு நல்ல வருவாயைப் பார்க்க முடியவில்லை. ஆக நஷ்டத்தில் நிறுவனத்தை இயக்கி எங்களையும் பிசினஸை விட்டு ஓட விடுகிறார்கள் என்று தானே அர்த்தம்.

டேட்டா பேக்குகள்

டேட்டா பேக்குகள்

ஜியோ வருவதற்கு முன் ஒரு ஜிபி முதல் ஐந்து ஜிபி வரையான டேட்டா சுமார் 300 ரூபாய்க்கு, ஒரு மாத காலத்துக்கு கொடுத்துக் கொண்டிருந்தோம். அந்த கால கட்டத்தில் மக்களும் கையில் இருக்கும் டேட்டாவை தீர்ப்பதற்கே தள்ளாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று 10 முதல் 12 மடங்கு கூடுதலாக டேட்டாவை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த 300 திட்டத்துக்கு யாரும் வருவதில்லை.

அம்பானி உடன் சந்திப்பு

அம்பானி உடன் சந்திப்பு

எனக்கும் முகேஷ் அம்பானிக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருக்கிறது. ஆனால் இருவருமே வியாபாரத்தைப் பார்கக் வேண்டுமில்லையா..? ஆக அவர் தன்னுடைய நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். நான் என் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்... பார்ப்போம். சொல்ல மறந்துவிட்டேன் என் பிசினஸை வளர்க்க, கடன்களைக் குறைக்க கைவசம் இருக்கும் செல்போன் டவர்களை விற்க இருக்கிறேன் என வருத்தத்தோடு முடித்தார் சுனில் மித்தல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: airtel jio
English summary

indian telecoms future is in mukesh ambanis hand

indian telecoms future is in mukesh ambanis hand
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X