சமீபத்தில் பத்ம பூஷன் விருது வாங்கியவருக்கு மாதம் 2.08 கோடி சம்பளமா..? யார்... எப்படி..?

ஆங்கிலத்தில் எஃப்எம்சிஜி FMCG - Fast Moving consumer Goods எனச் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். இதில் காலையில் பல் துளக்கு பேஸ்ட் தொடங்கி, இரவு தூங்கும் போது கொசு கடிக்கு பத்த வைக்கு கொசு வத்தி வரை எல்லாமே இந்த FMCG என்கிற வார்த்தைகளுக்கும் அடக்க வேண்டி இருக்கிறது அத்தனை பெரிய துறை. இதில் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாக்களும் உண்டு.

எம்டிஹெச் - மஹாசியன் தி ஹத்தி

எம்டிஹெச் - மஹாசியன் தி ஹத்தி

எம்டிஹெச் நிறுவனம் இந்திய மசாலாக்களுக்கு பெயர் போனது. கடந்த 100 வருடங்களுக்கு மேல் இந்திய சமையல் அறைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மசாலா நிறுவனத்தின் சிஇஓ தரம்பால் குலாத்திக்குத் தான் ஜனவரி 26 மாலை பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

தரம்பால் குலாத்தி

தரம்பால் குலாத்தி

இவர் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் 15 சதவிகிதம் வருவாய் அதிகரித்து 924 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார்கள். அதே போல் நிகர வருமானமும் 24% அதிகரித்து 213 கோடியாக வளர்ந்திருக்கிறது. இந்த வணிக வளர்ச்சியை கெளரவிக்கும் விதத்தில் தான், வணிகம் மற்றும் தொழில் துறையில் பத்ம பூஷன் விருது வழங்கி இருக்கிறார்கள்.

ஆண்டுச் சம்பளம்

ஆண்டுச் சம்பளம்

இந்தியாவில் உள்ள அனைத்து FMCG நிறுவன சிஇஓ-க்களை விடவும் 95 வயது தரம் பால்சிங்குக்குத் தான் அதிக சம்பளம் வழங்குகிறார்கள். ஆண்டுக்கு 25 கோடி ரூபாய். ஐடிசி, கோத்ரேஜ் போன்ற மிகப் பெரிய நிறுவன சிஇஓ-க்களுக்குக் கூட இத்தனை சம்பளம் கிடையாதாம். aஅனால் கையில் வாங்கும் 25 கோடியில் சுமார் 22.5 கோடியை அப்படியே தான தர்மங்கள் செய்து விடுவாராம்.

ஆரம்பம்

ஆரம்பம்

1919- ஆண்டில் பாகிஸ்தானின் சியால்கோட்டில் தன் தந்தையோடு ஒரு சின்ன கடை நடத்தி வந்தார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வெறும் 1500 ரூபாயுடன் தில்லியின் கரோல் பாக் பகுதியில் முதல் கடையைப் போட்டார். மசாலா அரைத்துக் கொடுக்கும் கடை. 1953-ல் சாந்தினி செளவுக்கில் தன் மசாலாவை பாக் செய்து விற்க ஒரு சில்லறை வணிகக் கடை, 1959-ல் சொந்தமாக மசாலா அறைக்கும் ஆலை என ஏற்றம் தான்.

மசாலா வகைகள்

மசாலா வகைகள்

2018 டிசம்பர் நிலவரப்படி எம்டிஹெச் பிராண்டின் கீழ் 60 மசாலா பொருட்கள் விற்பனை ஆகின்றனவாம். இதில் Deggi Mirch, Chat Masala and Chana Masala போன்ற மூன்று தான் எம்டிஹெச் நிறுவனத்தையே தூக்கிப் பிடிக்கும் மசாலாக்களாம். மேலே சொன்ன ஒவ்வொரு மசாலா பாக்கெட்டும் மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி பாக்கெட்டுகள் விற்கப்படுகிறதாம்.

முன் மாதிரி

முன் மாதிரி

மசாலா பிசினஸ் என்பதால் இந்தியா தொடங்கி ஆஃப்கானிஸ்தான், ஈரான் வரை மூலப் பொருட்களை ஒப்ப்ந்த அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கி வருகிறார்களாம். அந்த அளவுக்குத் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதவராம் தாத்தா தரம்பால் குலாத்தி.

இன்று

இன்று

2018 நிலவரப்படி எம்டிஹெச் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1500 கோடி ரூபாய். இவரின் மகன் தான் அனைத்து பிசினஸ் விஷயங்களைப் பார்த்துக் கொள்கிறார். இவரின் ஆறு மகள்களும் இந்தியாவின் ஆறு பிராந்திய பிசினஸ்களை பார்த்துக் கொள்கிறார்கள். இந்தியா மட்டும் இன்றி துபாய், லண்டன் போன்ற இடங்களிலும் எம்டிஹெச்-க்கு அலுவலகங்கள் இருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இவர்களின் மசாலா ஏற்றுமதி ஆகிறதாம். வாழ்த்துக்கள் தரம்பால் ஜி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+