டாடா பவர் நிறுவனத்தின் நிகர லாபம் 67.42 சதவிகிதம் சரிவு..!

கடந்த 2017 - 18 நிதி யாண்டில் டிசம்பர் காலாண்டில் 628.61 கோடி ரூபாய் நிகர லாபம் பார்த்த டாடா பவர் நிறுவனம் இந்த 2018 - 19 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 24.61 கோடி ரூபாய் மட்டுமெ நிகர லாபம் பார்த்திருக்கிறது.

வருவாய் அதிகரிப்பு

வருவாய் அதிகரிப்பு

2018 - 19 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 7,721 கோடி ரூபாயை வருவாயாக பெற்றிருக்கிறார்கள். இதுவே கடந்த 2017 - 18 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 6,451 கோடி ரூபாயை மட்டுமே பெற்றிருந்தார்கள். வருவாய் அதிகரித்தும் ஏன் நிகர லாபம் அதிகரிக்கவில்லை என முதலீட்டாலர்கள் கேட்டிருக்கிறார்கள்.

செலவுகள் அதிகம்

செலவுகள் அதிகம்

எரிபொருளுக்கான செலவுகள் 2,491 கோடி ரூபாயில் இருந்து 3,189 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடன்களுக்கான வட்டி மற்றும் இதர வங்கிச் செலவுகள் 855.28 கோடி ரூபாயில் இருந்து 1,013.96 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கின்றன. இதனால் தான் இந்த 2018 - 19 டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் குறைந்தது என விளக்கம் அளித்திருக்கிறது டாடா பவர் நிறுவனம்.

ஒன்பது மாதங்களுக்கு

ஒன்பது மாதங்களுக்கு

2018 ஏப்ரல் தொடங்கி டிசம்பர் 2018 வரையான ஒன்பது மாதங்களுக்கு நிகர லாபமாக 2,333 கோடி ரூபாயை ஈட்டி இருக்கிறது. ஆனால் இதுவே 2017 ஏப்ரல் தொடங்கி 2017 டிசம்பர் வரையான ஒன்பது மாதங்களில் நிகர லாபமாக 1,246 கோடி ரூபாய் ஈட்டி இருக்கிறது. ஆக டிசம்பர் காலாண்டில் குறைந்தாலும், ஒட்டு மொத்தத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிகர லாபம் வரும் என எதிர்பார்க்கிறார்களாம்.

பங்கு விலை

பங்கு விலை

கடந்த வெள்ளிக்கிழமை அன்று டாடா பவர் நிறுவனப் பங்குகள் 73.95 ரூபாய்க்கு வர்த்தக நேர முடிவில் நிறைவடைந்தது. ஆனால் இந்த காலாண்டுக்கு முடிவுக்குப் பின் மேலும் 4.06 சதவிகித இறக்கம் கண்டு 70.95 ரூபாய்க்கு நிறை வடைந்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+