இரும்பின்றி ஏதும் இல்லை, தலைக்கு பூ வைக்கும் ஹேர் பின் தொடங்கி பறக்கும் விமானம் வரை எல்லாமே இரும்பு தான். உலகின் மொத்த தொழிற்துறையினருக்கும் இரும்பு தான் முதல் கடவுள். இப்போது அந்த இரும்பு உற்பத்தியில் இந்தியா ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது.
உலக இரும்புச் சங்கம்
World Steel Association என்கிற அமைப்பு தான் உலகில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு நிறுவனங்களை தன் உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு இந்த கணக்கீடுகளை வெளியிடுகிறது. உலகின் மொத்த இரும்பு உற்பத்தியில் 85% இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். உலகின் டாப் 10 இரும்பு உற்பத்தியாளர்களில் ஒன்பது பேர் இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
இந்தியா
உலகின் மிகப் பெரிய இரும்பு உற்பத்தியாளராக இருக்கும் சீனா 2018-ம் ஆண்டில் 928 மில்லியன் டன் இரும்பை உர்பத்தி செய்து தன் முதல் இடத்தை தொட முடியாத அளவிலேயே தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியா 2018 106.5 மில்லியன் டன் இரும்பை உற்பத்தி செய்து ஜப்பானை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
கடந்த ஆண்டில்
2017-ல் சீனா 870 மில்லியன் டன்னும், ஜப்பான் 104.61 மில்லியன் டன்களும், இந்தியா 101.5 மில்லியன் டன்களும் உற்பத்தி செய்து முறையே முதல் மூன்று இடங்களில் இருந்தார்கள். ஜப்பான் 2018 0.3 % உற்பத்திக் குறைவால் இந்தியாவிடம் தன் இரண்டாவது இடத்தை பறி கொடுத்திருக்கிறது.
மற்ற இடங்கள்
அமெரிக்கா 86.7 மில்லியன் டன், தென் கொரியா 72.5 மில்லியன் டன், ரஷ்யா 71.7 மில்லியன் டன், ஜெர்மனி 42.4 மில்லியன் டன், துருக்கி 37.3 மில்லியன் டன், பிரேசில் 34.7 மில்லியன் டன், ஈரான் 25 மில்லியன் டன் உற்பத்தி செய்து அடுத்த ஏழு இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்.
மொத்த உலகம்
அனைத்து உலக நாடுகளையும் சேர்த்து, இந்த உலக இரும்புச் சங்க உறுப்பினர்கள் 2018-ம் ஆண்டில், உற்பத்தி செய்த மொத்த இரும்பின் அளவு 1,808.6 மில்லியன் டன்களாம். கடந்த 2017-ம் ஆண்டில் உற்பத்தி செய்த 1,729.8 மில்லியன் டன்னை விட 2018-ம் ஆண்டில் 4.6% கூடுதலாக இரும்பு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications