2014-ம் ஆண்டு லண்டனின் ஹீத்ரூவ் விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி துபாய் விமான நிலையம் உலகின் பிசியான விமான நிலையமாக இடம் பிடித்தது. 2014 முதல் 2018 வரையான நான்கு ஆண்டும் இந்த முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறதாம்.
எதன் அடிப்படையில்
விமானப் பயணிகள் சர்வதேச பயணங்களை மேற்கொள்ள விமான நிலையங்களுக்கும் வருவதன் அடிப்படையில் தான் துபாய் உலகின் பிசியான விமான நிலைய பட்டியல்களில் முதல் இடத்தில் இருக்கிறது. ஒட்டு மொத்தமாக அதிக விமானங்கள் வருகை, அதிக பயணிகள் வருகை போன்றவைகளை எல்லாம் வைத்து over all பிரிவில் Hartsfield-Jackson Atlanta International Airport முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
பயணிகள் விவரம்
கடந்த 2018-ம் ஆண்டில் சுமார் 8.9 கோடி விமானப் பயணிகளுக்கு சர்வதேச விமான சேவை வழங்கி துபாய் முதல் இடம் பிடித்திருக்கிறது. 2017-ம் ஆண்டு 8.8 கோடி விமானப் பயணிகளுக்கு சேவை வழங்கி இருந்தது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 75 விமானங்கள் தரையிரங்கி தன் பயணிகளை அழைத்துச் செல்கிறதாம்.
எந்த மாதம்
மொத்த 2018-ம் ஆண்டில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தான் பயணிகளின் வருகை 80 லட்சத்துக்கு மேல் இருந்திருக்கிறதாம். நாட்டின் அடிப்படையில் 1.22 கோடி இந்தியர்கள் துபாய் வழியாக மற்ற நாடுகளுக்கு பயணித்திருக்கிறார்கள்.
துபாய் சாதனை
1960-களில் இருந்து செயல்படும் துபாய் சர்வதேச விமான நிலையம் இதுவரை ஒரு மாதத்தில் 80 லட்சம் விமானப் பயணிகளுக்கு சேவை வழங்கியதில்லையாம். எனவே 2018-ம் ஆண்டு தங்களுக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்திருப்பதாக துபாய் விமான நிலைய சிஇஓ Paul Griffiths தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
நாடுகள் அடிப்படையில்
எனவே துபாய் விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள் இந்தியர்கள். நம்மைத் தொடர்ந்து சவுதி அரேபியாவும் 64 லட்சம் பேரும், சீனாவில் இருந்து 35 லட்சம் பேரும் துபாய் விமான நிலையத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்களாம்.
டார்கெட் 2021
2021-க்குள் அமெரிக்காவின் Hartsfield-Jackson விமான நிலையத்தையும், சீனாவின் Beijing Capital விமான நிலையத்தையும் பின்னுக்கு தள்ளி ஒட்டு மொத்த சேவை வழங்கள், பயணிகளைக் கையாளும் எண்ணிக்கை, விமானங்கள் கையாளுதல் என அனைத்திலும் முதல் இடம் பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் துபாய் விமான நிலைய சி இ ஓ Paul Griffiths.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications