பொதுவாக அரசு வங்கிகள் என்றாலே நமக்கு இந்திரா காந்தி காலத்தில் நகர்வாலா ஊழல், ஹர்ஷத் மேத்தா ஊழல் தொடங்கி சமீபத்தைய நிதின் சந்தேஸரா கடன் வாங்கி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியது போன்ற நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.
மாற்றம்
ஆனால் இந்த இக்கட்டான சூழலில் முதல் முறையாக கனரா வங்கி, தன் நிதி நிலை அறிக்கைகளில் வாராக் கடன்களாக காட்டிய சில கடன்களை வசூலித்திருக்கிறது. இதுவரை எத்தனை கோடி ருபாய் வாராக் கடன்களை, யாரிடம் இருந்து வசூலித்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை வங்கி நிர்வாகம் வெளியிடவில்லை.
கணிப்பு
Refinitiv என்கிற நிறுவனம் கனரா வங்கியின் 2018 - 19 நிதி ஆண்டுக்கான டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 299 கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம் என கணித்திருந்தது. ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் கடந்து 318 கோடி ரூபாயை நிகர லாபமாக காட்டி இருக்கிறது.
ஒப்பீடு
கடந்த 2018 - 19 செப்டம்பர் காலாண்டில் 299 கோடி ரூபாயை நிகர லாபமாக காட்டி இருந்தது. ஆனால் கடந்த 2017 - 18 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் கனரா வங்கியின் நிகர லாபம் 125 கோடி ரூபாயாக இருந்தது. ஆக 2017 - 18 நிதியாண்டை விட 2018 - 19 நிதியாண்டில் 153 சதவிகிதம் வளர்ச்சி காட்டி இருக்கிறது கனரா வங்கி.
சொத்துக்களின் தரம்
மொத்த வாராக் கடன் விகிதம் என ஒரு விஷயத்தை வங்கிகளுக்கு பார்ப்பார்கள். அதாவது வங்கி 100 ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது என்றால் அதில் எத்தனை ரூபாய் வாராக் கடனாக இருக்கிறது என ஒரே விகிதத்தில் கண்டு கொள்ளலாம். இப்போது கனரா வங்கி 100 ரூபாய் கொடுத்திருக்கும் கடனில் 10.25 ரூபாய் தான் வாராக் கடனாக இருக்கின்றன.
வாராக் கடன் விகித ஒப்பீடு
களின் அளவு கொடுத்திருக்கும் கடன் தொகையில் 10.25 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்த மொத்த வாராக் கடன் விகிதம் 10.56% ஆக இருந்தது. கடந்த 2017 - 18 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் மொத்த வாராக் கான் விகிதம் 10.38% ஆக இருந்தது. எப்படிப் பார்த்தாலும் 2018 - 19 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் இருக்கும் மொத்த வாராக் கடன் விகிதம் குறைவாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications