இந்தியாவின் டாப் ஐந்து மென்பொருள் நிறுவனங்களில் ஹெச்சிஎல் நிறுவனமும் ஒன்று. இன்று மாலை அந்நிறுவனத்தின் டிசம்பர் 2018 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
நிகர லாபம் வளர்ச்சி
2018 - 19 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் ஹெச் சிஎல் நிறுவனம் 2,611 கோடி ரூபாயை நிகர லாபமாக காட்டி இருக்கிறது. கடந்த டிசம்பர் 2017 காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 2,194 கோடி ரூபாயாக இருந்தது. இது 19% வளர்ச்சி
வருவாய் வளர்ச்சி
2018 - 19 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் ஹெச் சிஎல் நிறுவனம் 15,699 கோடி ரூபாயை வருவாயாகக் காட்டி இருக்கிறது. கடந்த டிசம்பர் 2017 காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 12,808 கோடி ரூபாயாக இருந்தது. இது சுமார் 22% வளர்ச்சி
டாலரில் வருவாய்
டிசம்பர் 2018-ல் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிகர லாபத்தை டாலரில் பெற்ற பேமெண்டுகள் அடிப்படையில் கணக்கிட்டால் ஏழு சதவிகிதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. அதே போல் டிசம்பர் 2018-ன் வருவாயை டாலரில் பெற்றதை டாலரிலேயே கணக்கிட்டால் 10.8% அதிகரித்திருக்கிறது.
தொடர் வளர்ச்சி
2018 - 19 நிதி ஆண்டில் ஹெச் சிஎல் நிறுவனத்தின் வருவாய் 9.5 சதவிகிதம் தொடங்கி 11.5 சதவிகிதம் என்கிற அளவில் பராமரிக்கப்படுகிறதாம். கையில் கூடுதலாக பணம் இருப்பதால் ஒரு இடைக்கால ஈவுத் தொகையையும் அறிவித்திருக்கிறது ஹெச்சிஎல். ஒரு பங்குக்கு இரண்டு ரூபாய் அறிவித்திருக்கிறார்கள்.
ஊழியர்கள் எண்ணிக்கை
கடந்த செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரையான மூன்று மாதத்தில் சுமார் 13,191 நபர்கலை புதிதாக வேளைக்கு எடுத்திருக்கிறார்கள். டிசம்பர் 2018 முடிவில் மொத்தமாக ஹெச்சிஎல் நிறுவனத்தில் 1,32,328 பேர் வேலை செய்கிறார்கள். இந்திய ஐடி துறையில் அட்ரிஷன் ரேட் (ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் வேலையை விட்டு செல்பவர்கள் விகிதம்) 17.8 சதவிகிதமாக இருக்கிறதாம். ஆகையால் தெளிவாக வேலையை விட்டு சென்றவர்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இந்த அட்ரிஷன் விகிதம் கடந்த 12 மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.


Click it and Unblock the Notifications