ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என அறிவிக்க வேண்டும், வரிதாரர்கள் கோரிக்கை..!

சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைத்து இந்திய வரி செலுத்துவோர் சங்க தலைவரான திரு வி.முரளி சில வேண்டுகோளை வரிசெலுத்த்வோர்கள் சார்பாக முன் வைத்திருக்கிறார்

கோரிக்கை 1

கோரிக்கை 1

வருமான வரி விலக்கு அளிக்கும், வரம்பை 2014 தொடங்கி 2019 வரையான நான்கு நிதி ஆண்டுகளாக உயர்த்த வில்லை. ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் ஒரு ஐம்பது ஆயிரம் ரூபாய் வீதம் உயர்த்தி இருந்தால் கூட, இந்த 2019 - 20 நிதி ஆண்டில் வருமான வரி உச்ச வரம்பு 2.5 லட்சம் + 2 லட்சம் ரூபாய் என 4.5 லட்சமாக அதிகரித்திருக்கும். ஆக வருமான வரி அடிப்படைக் கழிவுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயாவது நிர்ணயிக்க வேண்டும்.

கோரிக்கை 2

கோரிக்கை 2

வருமான வரிச் சதவிகிதங்களிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் ஈட்டுபவர்களுக்கு 10% வரி விதிப்பு இருக்க வேண்டும். அதே போல் பத்து முதல் இருபது லட்சம் வருவாய்க்கு 20% வரிவிதிப்பும், 20 லட்சத்துக்கும் மேல் வருவாய் உடையோருக்கு 30% வரியும் விதிக்க வேண்டும்.

கோரிக்கை 3 & 4

கோரிக்கை 3 & 4

வருமான வரிச் சட்டம் 80சி பிரிவில் காட்டப்படும் முதலீடுகள், வரிக் கழிவுகள், 1,50,000 ரூபாயில் இருந்து 3,00,000 ரூபயாக உயர்த்த வேண்டும். தற்போது சொந்த வீடு வாங்குபவர்களின் வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகைக்கு 2,00,000 ரூபாய் மட்டுமே ஒரு ஆண்டுக்கான உச்ச வரம்பாக் இருக்கிறது. இந்த நிலை மாற்றி வீட்டுக் கடனுக்கான மொத்த வட்டியும் கழியும் விதத்தில் வருமான வரி விதிகள் மாற்றபட வேண்டும்.

நடக்குமா..?

நடக்குமா..?

2017 - 18 நிதி ஆண்டில் இந்தியாவில் மொத்தமாக வருமான செலுத்துவோரின் எண்ணிக்கை 6.84 கோடி பேர். இதில் நிறுவனங்களும் அடக்கம். இந்த எண்ணிக்கையில் சுமாராக 90 சதவிகிதம் பேர் சேர்ந்து வரியாக 2.4 லட்சம் கோடி ரூபாயைச் செலுத்தி இருக்கிறார்கள். அடுத்த ஐந்து சதவிகித அதிகம் சம்பள தாரர்கள் 1.3 லட்சம் கோடி ரூபாயை வரியாகச் செலுத்தி இருக்கிறார்கள். மீதமுள்ள ஐந்து சதவிகித வரி தாரர்கள் தான் மீதமுள்ள 6.07 லட்சம் கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறார்கள்.

நிதிப் பற்றாக்குறை

நிதிப் பற்றாக்குறை

ஏற்கனவே அரசை நிதிப்பற்றாக்குறை இல்லாமல் நடத்த, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து நல்ல பெயர் வாங்க என பணத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்த நிலையில் வருமான வரி வரம்பை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்துவது, வரி வரம்புகளையே மாற்றுவது, வரி விகிதங்களை மாற்றுவது எல்லாம் சத்தியமில்லாத செயலாகத் தான் தெரிகிறது. அதையும் மீறி மாற்றினால் அது நிச்சயமாக பெரிய விஷயம் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+