அரசியல்வாதி என்றாலே என்னய்யா நாலு தலைமுறைக்கு சொத்து வெச்சிருப்பாய்ங்க..? என்கிற எண்ணம் தான் எளிதில் வரும். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் நிலைமை தலைகீழ். மத்தியப் பிரதேசத்தில், ஷியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய்பூர் தொகுதியில் இருந்து சீதாராம் ஆதிவாசி என்கிற பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வீடு இல்லை
55 வயது சீதாராமுக்கு சொந்தமாக ஒரு குடிசை இருக்கிறது. இந்த குடிசையில் இருந்து தான் தன் அரசியல் பணிகளைச் செய்து வருகிறார் சீதாராம். அவர் தொகுதி மக்களுக்கு தங்கள் சட்ட மன்ற உறுப்பினர் மட்டும் இப்படி சொந்தமாக கான்கிரிட் வீடு கூட இல்லாமல் இருப்பது தங்கள் தொகுதிக்கு அவமானமாக இருக்கிறதாம். எனவே விஜய்பூர் தொகுதி மக்களே பணம் திரட்டி தங்கள் எம்.எல்.ஏ-க்கு ஒரு வீடு வாங்கித் தர அல்லது கட்டித் தர இருக்கிறார்களாம்.
முதல் சம்பளம்
ஒரு மத்தியப் பிரதேச சட்ட மன்ற உறுபினருக்கு மாதம் 1.10 லட்சம் ரூபாய் சம்பளமாகக் கிடைக்குமாம், சீதாராமும் தன்னுடைய முதல் எம்.எல்.ஏ சம்பளத்தை வாங்க ஆவலோடு காத்திருக்கிறாராம். சம்பளம் வர வர மக்கள் பணத்தை மக்களுக்காகவெ மீண்டு செலவு செய்யும் திட்டத்தோடு இருக்கிறாராம்.
எங்கள் தலைவனுக்கு ஒரு வீடு
விஜய்பூர் தொகுதி மக்கள் "சீதாரம் எந்த சூழலிலும் மக்களுக்காக போராடத் தயங்கியதில்லை. மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தால் அதில் பங்கு பெறவும் தவறியதில்லை. எங்கள் தேவைகளை கேட்டு கேட்டு பூர்த்தி செய்தவர் எங்கள் அண்ணன் சீதாராம். அவருக்காக ஒரு வீடு கட்டுகிறார்கள் என்றால் நிச்சயம் காசு கொடுப்போம்" என பூரிக்கிறார் அந்த தொகுதிவாசி தன்ராஜ்
துலாபாரம்
மக்கள் எனக்காக 100 ரூபாய் தொடங்கி 1000 ரூபாய் வரை தாங்கள் உழைத்து ஊதியமாகப் பெற்ற பணத்தை எனக்காக, என் வீட்டுக்காக கொடுக்கிறார்கள். நான் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே என் எடைக்கு சமமாக சில்லறைக் காசுகளைக் கொடுத்தார்கள். அதையும் வீடு கட்ட பயன்படுத்த இருக்கிறார்களாம்.
சொத்து மதிப்பு
இவர் தேர்தலில் நிற்கும் போது அரசிடம் சமர்பித்த சொத்து விவரக் கணக்குகளில் தனக்கு மொத்த சொத்தாக 46,733 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் அதில் 25,000 ரூபாய் ரொக்கமாக கையில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். அசையாச் சொத்துக்களாக 600 சதுர அடி வீட்டு நிலமும், இரண்டு ஏக்கர் நிலமும் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். மொத்த நிலத்தின் மதிப்பு சுமார் 5 - 6 லட்சம் வரை வரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
முந்தைய தோல்விகள்
இந்த 2018 தேர்தலுக்கு முன் சீதாராம் ஒரு முறை சுயேட்சையாகவும், இரண்டு முறை பாரதிய ஜனதா கட்சி சார்பாகவும் போட்டி இட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. நான்காஅது முறை பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டி இட்டு முதல் முறை சட்ட மன்ற உறுப்பினராகி இருக்கிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications