100% தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் கார் ஆலை ஆந்திராவில் தொடக்கம்

கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம் அனந்தபூரில் கட்டப்பட்டுள்ள புதிய ஆலையில் சோதனை ரீதியிலான உற்பத்தியை தொடங்கியது. இத் தொழிற்சாலையை நேற்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு தொடங்கி வைத்தார். அவரோடு கொரிய தூதர் ஷின் பாங்கில் (Shin Bongkil), கியா மோட்டார்ஸின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி Han-Woo, கியா மோட்டார்ஸின் நிர்வாக இஅய்க்குநர் மற்றும் கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதன்மைச் செயல் அதிகாரி Kookhyun Shim ஆகியோரும் கலந்து கொண்டார்களாம்.

கூடுதலாக சோல்' பேட்டரி காரை சந்திரபாபு நாயுடு ஓட்டிப்பார்த்தார்.

கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ்

சர்வதேச அளவில் கார் உற்பத்தியில் 8-வது பெரிய நிறுவனமாக கியா மோட்டார்ஸ் இருக்கிறது. இந்த கியா மோட்டார்ஸ் உலகப் புகழ் ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் 15-வது ஆலையாக அனந்தபூர் ஆலை இருக்கிறது. கியா மோட்டார்ஸின் அனந்தபூர் ஆலை 536 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலை ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமைத்திருக்கிறார்களாம்.

பொறுப்புகள்

பொறுப்புகள்

கியா மோட்டார்ஸின் அனந்தபூர் ஆலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ரோபாட்கள் அதிகம் பயன்படுத்துவார்களாம். அதோடு இந்த ஆலையில் பயன்படுத்தப்படும் நீர் 100% மறு சுழற்சி செய்யப்பட்டும் மீண்டும் ஆலைகளுக்கே பயன்படுத்தப்படுமாம்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

இந்த புதிய கியா மோட்டார்ஸ் ஆலை மூலம் 3 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 7 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்குமாம். கியா மோட்டார்ஸ் அனந்தபூர் ஆலைக்காக சுமார் 14,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறதாம். கார்கள் இன்றைய தேதியில் எவ்வலவு நவீனமயமாக உருவாக்கப்பட முடியுமோ அந்த அளவுக்கு அனந்தபூர் ஆலையை நவீன கருவிகளைப் பொருத்தி உருவாக்கி இருக்கிறார்களாம். இந்த ஆலையில் சுமாராக 300 ரோபோக்கள் பொருத்தி இருக்கிறார்களாம்.

பயிற்சிப் பள்ளி

பயிற்சிப் பள்ளி

இந்த ஆனந்தபூர் ஆலையில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிள் ஆட்டோமொபைல் சம்பந்தமாக அடிப்படை பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட இருக்கிறதாம். இந்த வேலையை ஆந்திர அரசோடு சேர்ந்து செய்ய இருக்கிறது கியா மோட்டார்ஸ். இதனால் கார் உற்பத்தி குறித்த அறிவு ஆந்திர இளைஞர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பது தான் ஆந்திர அரசின் நோக்கமாம்.

சந்திரபாபு பேச்சு

சந்திரபாபு பேச்சு

தொழிற்சாலைகளின் முகவரியாக அனந்தபூர் விளங்கி வருகிறது. வறட்சி மாவட்டமான இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் வந்ததால், வேலை வாய்ப்பு பெருகி உள்ளது. புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் நாட்டிலேயே ஆந்திர மாநிலம் முதல் இடம் வகிக்கிறது. ஆந்திரா தற்போது மோட்டார் நிறுவனங்களின் விருப்பமான உற்பத்திக் கேந்திரமாக மாறியுள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் சுஸிகி, அசோக் லேலண்ட், அப்பல்லோ டயர்ஸ் ஆகிய தொழிற்சாலைகள் வந்துள்ளன. இந்தப் பட்டியலில் கூடிய விரைவில் ‘ஹீரோ மோட்டார்ஸ்' நிறுவனமும் அனந்தபூருக்கு வர உள்ளது என்றார் சந்திரபாபு

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+