அப்படியும் சொல்லலாம். என சிரிக்கிறார் ஆப்பிள் சி இஓ டிக் குக். குறிப்பாக டாலருக்கு நிகரான மற்ற நாட்டு கரன்ஸி மதிப்பு குறிப்பாக ஆப்பிள் பொருட்கள் விற்கப்படும் சந்தை நாடுகளின் கரன்ஸி மதிப்பு மிகவும் அதிகமாக சரிந்து வருக்கிறது.
விளக்கம்
அமெரிக்காவில் ஐபோன் X, 999 டாலருக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ரக ஐபோன்களை இந்தியாவில் 999 டாலர் * 65 ரூபாய் என விற்று வந்தது ஆப்பிள் நிறுவனம் எனவே 2018 ஜனவரியில் ஒரு ஆப்பிள் ஐபோன் X சுமாராக 65,000 ரூபாய்க்கு கிடைத்து வந்தது. இப்போது அதே ஐபோன் X ரக போனை அமெரிக்காவில் இருந்து ஒரு டீலர் வாங்க வேண்டும் என்றால் 999*70 = 70,000 ரூபாய்.
வியாபாரம் போச்சே
இப்படி கடந்த ஆண்டில் மட்டும் ஏகப்பட்ட ஐபோன்களின் விலை தாறுமாறாக ஏறி விட்டதால் ஐபோன்களின் விற்பனை சரிந்திருப்பதாக அப்பிள் கருதுகிறதாம். எனவே தனக்கு நஷ்டம் வராத அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஐபோன்களின் விலையை புதிதாக நிர்ணயித்து ஏற்றுமதி செய்து வருகிறதாம்.
அமெரிக்காவுக்கு அதே விலை
யாராவது நண்பர்கள் இருந்தால் அவர்கள் மூலம் ஐபோன் வாங்கி அனுப்பச் சொல்லாதீர்கள். ஏன் என்றால் அமெரிக்காவில் ஐபோன்களின் விலையை குறைக்கவில்லையாம். காரணம் உள் நாட்டிலேயே தான் வியாபார்ம செய்கிறார்கள் என்பதால் கரன்ஸி கன்வர்சன் பிரச்னை எழாது எனவே விலையைக் குறைக்கவில்லை என்கிறது ஆப்பிள்.
விலைச் சந்தை
இன்று ஷியாமி, ஓப்போ, சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஐபோன்களுக்கு இணையாக தரத்தில் தங்கள் பொருட்களை வியாபாரம் செய்கிறார்கள். இந்த நேரத்தில் விலை தான் வாடிக்கையாளரின் போனை தீர்மானிக்கும். எல்லோரும் சம தரத்துடன் 30,000 ரூபாய்க்கு ஒரு போனை விற்கிறார்கள் அதே தரத்திலான போனை 35,000 ரூபாய்க்கு ஆப்பிள் விற்றால் எப்படி ஐபோன்கள் விற்பனை ஆகும் என பத்திரிகையாளர்களையே கேள்வி கேட்கிறார். டிக் குக்.
எது எப்படியோ நாம ஐபோன் வாங்கப் போறதில்லை. வாங்குற இந்தியர்களாவது சந்தோஷப்படட்டுமே..!


Click it and Unblock the Notifications