உலகின் நம்பர் 1 பிராண்ட், நேற்று பிறந்த குழந்தைக்குக் கூடத் தெரியும் பிராண்டுகளில் ஆப்பிளுக்கும், ஆப்பிள் பொருட்களுக்கும் என்றுமே தனி இடம் உண்டு. ஆப்பிள் 2006 - 07 ஆண்டுகளில் தான் தன் புகழ்பெற்ற ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கத் தொடங்கியது.
ஐபோன் வருமானம்
அதுவரை நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த அல்லது சொற்ப லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனம் திடீரென அசுர வேகத்தில் லாபம் சம்பாதிக்கத் தொடங்கியது. எல்லாவற்றுக்கும் காரணம் ஐபோனும் அதன் தரமும் தான். ஒரு கட்டத்தில் மொத்த ஆப்பிள் வருமானத்தில் பெரும் பகுதியே ஐபோனை நம்பித் தான் இருந்தது.
மாற்றம்
கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் ஐபோன்கள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் சுமார் 15% வரை சரிந்திருக்கிறதாம்.. இதனால் இந்த காலாண்டு முடிவுகளில் தன் ஐபோன் விற்பனை எண்ணிக்கைகளை வெளியிடவில்லை. இதுவரை எப்போதுமே தன் ஐபோன் விற்பனை எண்ணிக்கைகளை கர்வத்தோடு வெளியிடுவது தான் ஆப்பிள் வழக்கம்.
கொஞ்சம் காசு
டிசம்பர் காலாண்டின் லாபமாக 20 பில்லியன் டாலரை சம்பாதித்திருக்கிறது ஆப்பிள். ஆனால் கடந்த டிசம்பர் 2017-ஐ விட இது ஒரு சதவிகிதக் குறைவு தான். டிசம்பர் 2018 காலாண்டுக்கு வருவாயாக 84.3 பில்லியன் டாலர் ஈட்டி இருக்கிறது ஆப்பிள். ஆனால் கடந்த டிசம்பர் 2017 காலாண்டை ஒப்பிடும் போது வருவாய் 5% சரிந்திருக்கிறதாம்.
ஐபோன் இல்லாமல்
ஆப்பிள் நிறுவனமே ஸ்டீவ் ஜாப்ஸின் ஐபோனால் தான் ஓடுகிறது என்கிற மாயையை இந்த காலாண்டு உடைத்திருக்கிறது. ஆப்பிளின் சேவை வருமானம் 19 சதவிகிதம் அதிகரித்து 10.9 பில்லியன் டாலர் ஈட்டி இருக்கிறார்களாம். ஆப்பிளின் மற்ற wearables and accessories ரக சாதனங்கள் மூலம் 33% கூடுதல் வருமானம் ஈட்டி இருக்கிறார்களாம்.
வரலாற்றில் முதல் முறை
ஒட்டு மொத்தமாக ஆப்பிள் பொருட்களை பயனப்டுத்துபவர்களின் எண்ணிக்கை 140 கோடி பேரைத் தாண்டி இருக்கிறதாம். இது ஆப்பிள் வரலாற்றிலேயே முதல் முறையாம். ஐபோன் விற்பனை சரிவுக்கு சீனாவில் ஏற்பட்ட பிரச்னைகள் தான் முக்கிய காரணம் என்கிறது ஆப்பிள்.
கணிப்புகள்
தொடர்ந்து ஆப்பிளின் ஐபோன்களின் விற்பனை சரிவது, ஆப்பிளின் பொருட்களுக்கு இணையான பொருட்கள் சந்தைக்கு வருவதைச் சொல்கின்ற்னா. எனவே இனி ஆப்பிள் தன் போக்கில் இன்னும் தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டும் என பல்வேறு அனலிஸ்டுகள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications