இந்தியாவின் முன்னனி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று இந்த பஜாஜ் ஆட்டோஸ். இந்த நிறுவனத்தின் டிசம்பர் 2018 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
லாபம் அதிகரிப்பு
பஜாஜ் ஆட்டோஸ் நிறுவனத்தின் டிசம்பர் 2018 காலாண்டில் நிகர லாபம் 1,102 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த டிசம்பர் 2017 காலாண்ட்டில் ஈட்டிய 952 கோடி ரூபாயை விட சுமார் 15 சதவிகிதம் அதிகம்.
அதிகரித்த விற்பனை
பஜாஜ் நிறுவனம் கடந்த அக்டோபர் 2018 தொடங்கி டிசம்பர் 2018 வரையான காலத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை விற்று இருக்கிறது இது கடந்த டிசம்பர் 2017 காலாண்டில் விற்ற வாகனங்களின் எண்ணிக்கை விட 26 சதவிகிதம் அதிகம். அதோடு ஏற்றுமதியும் கடந்த டிசம்பர் 2017 காலாண்டை விட சமீபத்தைய டிசம்பர் 2018 காலாண்டில் 23.5 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. டிசம்பர் 2018 காலாண்டில் 5.24 லட்சம் வாகனங்கள் பஜாஜ் நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.
செயல்பட்டு லாப வரம்பு
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வேலை வாகனங்களை தயாரித்து விற்பது தான். ஆக வாகனங்களைத் தயாரித்து விற்பதன் மூலம் 100 ரூபாய் கிடைக்கிறது என்றால் அதில் எவ்வளவு ரூபாய் லாபமாக நிற்கிறதோ அது தான் செயல்பாட்டு லாப வரம்பு. இதை ஆங்கிலத்தில் OPM - Operating Profit Margin என்பார்கள்.
OPM குறைவு
கடந்த ஒன்பது காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு பஜாஜ் ஆட்டோஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு சரிந்திருக்கிறதாம். தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 15.6 சதவிகிதமாகவே இருக்கின்றன. இதற்கு முந்தைய ஒன்பது காலாண்டுகளில் 16.6 சதவிகிதம் தான் மிகக் குறைவானதாக இருந்தது.
நாங்க தான் நம்பர் 1
"பஜாஜ் நிறுவனம் தன் வாகனங்கள் மூலம் பெரிய லாபங்களைச் சம்பாதிப்பதை விட தன் சந்தையை வலுப்படுத்தி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறது, அதை சரியாக செய்தும் வருகிறது. எனவே அடுத்த சில வருடங்களில் பஜாஜ் பெரிய மார்ஜின்களுடன் தன் வியாபாரத்தைப்பார்க்குமென எதிர்பார்க்கலாம்" என பங்குச் சந்தை அனலிஸ்டுகளும் வாகன சந்தை விமர்சகர்களும் சொல்லி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications