ஜுபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் (Jubilant Food works) என்கிற பெயரில் தான் டாமினோஸ் இந்தியாவில் பீட்ஸா வியாபாரம் செய்து வருகிறது. 1960-களிலேயே அமெரிக்காவில் தொடங்கி படிப்படியாக 1996-ல் தான் இந்தியாவுக்கு வந்தது டாமினோச் பீட்ஸா.
இந்தியா சந்தை
1996-ல் தில்லியில் தொடங்கி டாமினோல் பீட்சா இன்ரு இந்தியாவில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இன்ரு இந்தியா தான் உலகில் உள்ள மொத்த டாமினோஸ் பீட்ஸா விற்பனையில் நம்பர் 2. இந்தியாவில் 231 நகரங்களில் 1,126 கடைகளை வைத்து செமையாக கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது டாமினோஸ்.
டிசம்பர் 2018
2018 - 19 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டான டிசம்பர் 2018-ல் ஜுபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் (Jubilant Food works) நிறுவனம் 96.5 கோடி ரூபாய் நிகர லாபமாக பார்த்திருக்கிறது. இது கடந்த டிசம்பர் 2017 காலாண்டில் சம்பாதித்த 66 கோடி ரூபாயை விட 46 சதவிகிதம் அதிகம்.
வருவாய் தருவாய்
பீட்ஸா விற்பனை மூலம் மட்டும் டிசம்பர் 2018 காலாண்டில் 929 கோடி ரூபாயை ஈட்டி இருக்கிறது. இது கடந்த டிசம்பர் 2017 காலாண்டை விட 16.8 சதவிகிதம் அதிகம். ஒவ்வொரு இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு டாமினோஸ் பீட்ஸா கடையிலும் 2017 டிசம்பரை விட 2018 டிசம்பர் காலாண்டில் சராசரியாக 14.6% அதிகமாக பீட்ஸா விற்பனை ஆகி இருக்கிறதாம்.
இந்த காலாண்டில்
2018 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் 35 புதிய கடைகளை திறந்திருக்கிறார்களாம். கடந்த 11 காலாண்டுகளில் இல்லாத சாதனையாம். அதே நேரத்தில் லாபம் கொடுக்காத இரண்டு பீட்ஸாஅ கடைகளுக்கு பூட்டும் போட்டிருக்கிறார்களாம். ஒட்டு மொத்தத்தில் இப்போது டாமினோச் பீட்ஸாவுக்கு இந்தியாவில் 1,230 கடைகள் இருக்கின்றன.
அதிவேக மாற்றம்
ஆக நம் இந்தியர்கள் சோறு சப்பாத்தியில் இருந்து வெகு வேகமாக பீட்ஸா பர்கர் கலாச்சாரத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். அதை ஆதாரபூர்வமாக லாபத்தில் நிரூபிக்கிறது ஜுபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் (Jubilant Food works) நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைகள்.


Click it and Unblock the Notifications