உலகின் சூப்பர் பைக்குகளில் ஹார்லி டேவிட்சன் நிறுவன பைக்குகளுக்கு நிச்சயம் இடம் உண்டு. ஆனால் சமீபகாலாமாக ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. டிரம்பின் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டு லாபம் சரிந்து கதறுகி
நான் கெளம்புறேன்
கடந்த 2018-ல் அமெரிக்கா சீனா வுடனான வர்த்தகப் போரில் சீனா ஹார்லி டேவிசன் பைக்குகளுக்கு சகட்டு மேனிக்கு வரிகளை அதிகரித்தது. அதனால் சீனாவுக்கான வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதை சமாளிக்க தன் பைக்கு உற்பத்தி ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற முனைந்தது. இதனால் அமெரிக்க அரசுக்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கும் வாக்குவாதம் தொடங்கியது.
டிரம்பு தவிர
டிரம்பின் வர்த்தகப் போர் பிரச்னை தவிர அமெரிக்காவிலேயே ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விற்பானி 10% சரிந்திருக்கிறது. இப்படி விற்பனை சரிவது இது எட்டாவது காலாண்டு. ஆம் எட்டு காலாண்டுகளாக ஹார்லி பைக்குகள் அமெரிக்காவிலேயே சரியாக விற்பனை ஆவதில்லை.
ஆடை அணிகலன்களில் கவனம்
அமெரிக்க இளசுகளின் மனதைக் கவரும் கனவு பைக்குகளை உருவாக்கும் அதே நேரத்தில், குறைந்த விலையில் தரமான ப்ரீமியம் பைக்குகளை தயாரிப்பது, பைக்கர்கள் பயன்படுத்தும் மற்ற சாதனங்களை உற்பத்தி செய்து அமேஸானில் விற்பது என பல திட்டங்களை வைத்திருக்கிறார் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மேட் லெவாடிச் (Matt Levatich).
டிமாண்ட் சரிவு
ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய் பகுதிகளிலேயே தொடர்ந்து ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான டிமாண்ட் சரிந்து வருகிறதாம். உலக அலவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விற்பனை 6.7% சரிந்திருக்கிறதாம். 2027-ம் ஆண்டுகுள் ஹார்லி டேவிட்சன்-ன் மொத்த விற்பனையில் 50% வெளிநாடுகளில் இருந்து வரும் படி செய்ய இருக்கிறார்களாம்.
இந்த ஆண்டில்
அமெரிக்க வர்த்தகப் போருக்குப் பின், ஹார்லி டேவிட்சன் ஒரு புதிய உற்பத்தி ஆலையை தாய் லாந்தில் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கொஞ்சம் நிலைமை சரி வரும் என்கிறார்கள். இதனால் ஆண்டுக்கு 100 மில்லியன் டாலர் செலுத்தி வந்த ஹார்லி டேவிட்சன் வர்த்தகப் போருக்குப் பின் 120 மில்லியன் டாலர் செலுத்த வேண்டி வந்தது. தாய்லாந்து ஆலையில் உற்பத்தி தொடங்கினால் இந்த 120 மில்லியன் மீண்டும் பழைய படிக்கு 100 மில்லியனுக்கோ அல்லது அதை விட குறைவாகவோ இறங்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறது ஹார்லி டேவிட்சன்.
2019
இந்த 2019-ல் 2.17 லட்சம் முதல் 2.20 லட்சம் வரையான ஹார்லி டேவிட்சன் பைக்குகளை ஏற்றுமதி செய்ய இருக்கிறதாம். 2010-ம் ஆண்டு தொடங்கி இத்தனை 2018 வரையான ஒன்பது ஆண்டுகளில் ஹார்லி டேவிட்சன் 2.18 லட்சத்துக்கு கீழ் ஏற்றுமதி செய்ததில்லை.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications